பயர்பாக்ஸ் டேப் வழி பிரவுசிங்

நம்மில் பலர் விண்டோஸ் இயக்கத்தில் மல்ட்டி டாஸ்க்கிங் என்னும் பல செயல்பாடுகளை மேற்கொள்கிறோம். எடுத்துக் காட்டாக இணையத்தொடர்பில் ஒரு நண்பருடன் இன்ஸ்டண்ட் மெசேஜில் ஈடுபட்டுக் கொண்டிருப்போம்.

அதே நேரத்தில் நமக்கு வந்துள்ள இமெயில் கடிதங்களை நம் கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொண்டிருப்போம். வரும் வாரத்தில் என்ன என்ன ஸ்போர்ட்ஸ் முக்கியமாக நடக்கப் போகிறது என்றும் கவனிப்போம்;

இவற்றிற்கிடையே தங்கம் விலை ஏறுகிறதா இறங்குகிறதா என்றும் பார்ப்போம். இத்தனை செயல்களுக்கு இடையே அவசரமாய் அனுப்ப வேண்டிய கடிதத்தின் பிரிண்ட் அவுட் ஒன்றையும் பிரிண்டர் அச்சிட்டுக் கொண்டிருக்கும்.

இவை எல்லாம் ஒருவர் மல்ட்டி டாஸ்க்கிங் என்று சொல்லப்படும் ஒரே நேரத்தில் விண்டோஸ் இயக்கத்தில் பல்வேறான செயல்பாடுகளை மேற்கொள்கையில் திறன் இருந்தால் தான் மேற்கொள்ள முடியும்.


இப்படி திறமையுடன் நாம் அனைத்து செயல்பாடுகளிலும் மூழ்கிக் கொண்டிருக்கையில் நாம் எதிர்பாராத புரோகிராம் ஒன்று தன்னைக் காட்டிக் கொள்ளும் வகையில் திடீரென நுழைந்தால் நமக்கு எரிச்சல் தானே வரும்.

எனக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளில் இது வேறயா? என்று சலித்துக் கொள்வோரும் உண்டு. சரி எந்த வகை புரோகிராம் இது போல இடையே தலையைக் காட்டுகிறது?


அது எது வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நியூஸ் தளத்தின் லிங்க் ஒன்று திடீரெனத் திறக்கப்பட்டு தன் முகத்தைக் காட்டலாம். பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் காக்க வைத்திருக்கும் இமெயில் திறக்கப்பட்டு அதில் உள்ள லிங்க் திறக்கப்படலாம். அது எதுவாக இருந்தாலும் நம் பொறுமையைச் சோதிக்கும் ஒன்றாகத்தான் இருக்கும்.


சரிங்க! இதை எப்படி நிறுத்துவது? என்று நீங்கள் முணுமுணுக்கலாம். இதோ அதற்கான வழி. அதிர்ஷ்டவசமாக பயர்பாக்ஸ் இதற்கான சிறந்த வழியைத் தருகிறது. Tools, Options சென்று அங்குள்ள Advanced என்னும் ஐகானில் கிளிக் செய்திடவும். Tabbed Browsing என்னும் பிரிவில் இந்த வகையில் புதியதாக தோன்றும் புரோகிராம்களை உங்களுடைய விருப்பங்களின் படி(preference) காட்டப்படுமாறு செட் செய்திடலாம்.

ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படுமாறு வைக்கலாம். அல்லது அண்மையில் திறக்கப்பட்ட ஒரு விண்டோவில் புதிய டேப்பாக அமைக்கலாம். இதை அமைத்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் இந்த புதிய தோன்றல்கள் நீங்கள் செட் செய்தபடி அமையும்.

சரி, வாசகர் கோபால் அவர்களின் மெயின் கேள்விக்கு விடை அளித்தாயிற்று. அவர் மேலும் சில டிப்ஸ் கேட்டிருந்தார் அல்லவா! அதற்கு இதோ எனக்கு நினைவில் வந்த சிலவற்றைத் தருகிறேன்.


1. Ctrl + Tabஅழுத்தி உங்களுடைய டேப்களில் அமைக்கப்பட்ட வெவ்வேறு விண்டோக்களிடையே பயணம் செய்திடலாம்.

2. மிக அண்மையில் பார்த்த டேப்பினை மூட Ctrl + F4அழுத்தவும்.

3. Alt + F4 பயன்படுத்தினால் அந்த பிரவுசர் விண்டோவினை மூடலாம்.

4. ஒரு புதிய டேப் திறக்க Ctrl + T கீகளை அழுத்தவும்.

இந்த கீகள் தொகுப்பு அனைத்தையும் பயர் பாக்ஸ் பிரவுசரின் எந்த பதிப்பிலும் பயன்படுத்தலாம். அது மட்டுமின்றி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7லும் பயன்படுத்தலாம்.


டேப் பிரவுசிங் பயன்படுத்தி இனிய இணைய பயணத்தைத் தொடருங்கள்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails