கம்ப்யூட்டர் மவுசை தட்டினால் போதும் நம் நாட்டிற்கு வரும் மற்றும் வெளிநாட்டிற்கு செல்லும் கடத்தல்காரர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அதிகாரிகள் பெறலாம். இதற்காக, சாப்ட்வேர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்கள் நம்நாட்டிற்கு வந்தாலோ அல்லது வெளிநாட்டிற்கு சென்றாலோ அதிகாரிகளை எச்சரிக்கை செய்யும் வகையில், சாப்ட்வேர் ஒன்றை சுங்கத்துறையினர் வடிவமைத்துள்ளனர். இந்த சாப்ட்வேருக்கு, "மேம்பட்ட பயணிகள் தகவல் அமைப்பு' என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், ஏற்கனவே, கடத்தல் அல்லது வரி ஏய்ப்பு செய்து சுங்கத்துறையினரிடம் பிடிபட்டவர்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். அந்த குறிப்பிட்ட நபர் பயணம் செய்யும் போது, அவர்களின் பெயரை கம்ப்யூட்டர் திரையில் ஒலிபரப்பாகும். இந்த சாப்ட்வேர் கருவி, மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சுங்கவரித்துறை இயக்குனரகம் இந்த சாப்ட்வேரை உருவாக்கி உள்ளது. இதனால், விமானம் மூலம் வெளிநாடு செல்பவர்கள் மற்றும் உள்நாட்டிற்கு வருபவர்கள் பற்றிய விவரங்கள் சுங்கத் துறையினருக்கு தெரிவிக்கப்படும்.
வெளிநாட்டில் இருந்து சந்தேகிக்கப்படும் வகையில் ஒருவர் இங்கு வருகிறார் என்றால், அவரை பற்றிய தகவல்கள், விமானம் அந்த நாட்டில் இருந்து புறப்பட்ட 15 நிமிடத்தில் எங்களுக்கு கிடைத்துவிடும். ஆனால், இதில், முதல் முறை குற்றத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பது சிறிது சிரமம்.
0 comments:
Post a Comment