மருத்துவ உலகில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கான ஸ்பெல்லிங், பின்பற்றவும் அறிந்து கொள்ளவும் மிகக் கஷ்டமான ஒன்றாகும். அந்தத் துறையில் உள்ளவர்களே தடுமாறும் அளவிற்கு இருக்கும்.
ஏனென்றால் மருத்துவ கலைச் சொற்கள் அனைத்தும் ஆங்கிலவழி வந்தவை அல்ல. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் புரோகிராம்களில் உள்ள ஸ்பெல் செக்கர்கள் என்னும் எழுத்து திருத்தும் டூல், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து சொற்களின் எழுத்துப் பிழைகளைத் திருத்த இயலாது.
ஏனென்றால் இதில் தரப்பட்டுள்ள டிக்ஷனரிகள், சாதாரண அன்றாட ஆங்கிலப் பயன்பாட்டில் உள்ள சொற்களை மட்டுமே கொண்டவையாகும். அப்படியானால் மருத்துவ கலைச் சொற்களை எழுத்துப் பிழையின்றி எப்படி அறிந்து கொள்வது? அதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது
மெடிகல் ஸ்பெல் செக்கர் (Free Medical Spell Checker). இந்த புரோகிராமினைhttp://download.cnet.com/ FreeMedicalSpellChecker/30002079_410154940.html?tag=lst01 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக இறக்கிப் பந்து கொள்ளலாம்.
இது சாதாரண சிறிய அப்ளிகேஷனாகப் பதிந்து அமர்ந்து கொள்கிறது. இந்த சிறிய விண்டோவில் நீங்கள் எழுத்துப் பிழையின்றி காண விரும்பும் மெடிகல் சொல்லை டைப் செய்திடத் தொடங்கலாம்.
ஒவ்வொரு கீ அழுத்தத்திற்குமாக அடுத்த அடுத்த எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு முழு சொல் கிடைக்கிறது. இதன் மூலம் நமக்கு மருத்துவச் சொற்கள் அடங்கிய நல்லதொரு டிக்ஷனரி கிடைக்கிறது. ஆனால் சொற்களுக்குப் பொருள் கிடைப்பதில்லை.
இந்த மெடிகல் ஸ்பெல் செக்கர் இலவசமாகக் கிடைப்பதால் வேர்ட் போன்ற புரோகிராம்களுடன் இணைந்து இயங்குவதில்லை. தனியே இயக்கித்தான் எழுத்துப் பிழைகளை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இதே போன்று உள்ள மற்ற மெடிகல் ஸ்பெல் செக்கர்கள் வேர்டில் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன.
ஆனால் அவற்றைக் கட்டணம் செலுத்திப் பெறவேண்டும். அவை கிடைக்கும் தள முகவரி: http://www.notypos. com/downloads.htm இந்த தளத்தில் இலவசமாக சில நாட்களுக்கு சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்கவும் தொகுப்புகள் கிடைக்கின்றன
0 comments:
Post a Comment