அதிவேக இன்டர்நெட்: வி ப்ளாஷ்

இளைஞர்களை இலக்காகக் கொண்டு தன் மொபைல் சேவையை வழங்கி வரும் வெர்ஜின் மொபைல் நிறுவனம், அண்மையில் விப்ளாஷ்(VFlash) என்னும் அதிவேக இன்டர்நெட் சேவையினையும் தந்துள்ளது.

எப்போதும் இணையத் தொடர்பில் இருக்க விருப்பப்படும் இளைஞர்களுக்கென இந்த விப்ளாஷ் மோடம் அறிமுகப்படுத்தப் படுவதாக இந்நிறுவன தலைமை அதிகாரி மதுசூதன் கூறினார்.

விப்ளாஷ் மோடத்தைப் பயன்படுத்தி நல்ல வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினை எங்கு வேண்டுமானாலும் பெறலாம். மாதக் கட்டணம் ரூ.250 முதல் ரூ.1,000 வரை உள்ளது. இந்த விப்ளாஷ் யு.எஸ்.பி. மோடம் விலை ரூ.3,499.

இதன் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் 8ஜிபி. இன்டர்நெட் வேகம் விநாடிக்கு 3.1 மெகா பிட்ஸ். இதனுடன் விப்ளாஷ் டிவி, ஆன் டிமாண்ட் டவுண்லோட் போன்ற சேவைகள் இணைத்துத் தரப்படுகின்றன.

விப்ளாஷ் டிவி பயன்படுத்தி 40 பிரபலமான டிவி சேனல்களைப் பார்க்கலாம். இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாட்டினைத் தொடர்ந்து அதிகமாக்க வேண்டும் என்ற அரசின் திட்டத்திற்கு இது போன்ற புதிய சாதனங்கள் கை கொடுக்கும்.

விர்ஜின் மொபைல் சேவை டாட்டா டெலிசர்வீசஸ் மூலம் இந்தியாவில் வழங்கப்படுகிறது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails