"எந்திரன்" அடுத்த மாதம் வெளியீடு

"எந்திரன்' எந்த நிலைமையில் இருக்கிறது? இப்போதெல்லாம் திரையுலகில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டால் கேட்கும் கேள்வி இதுதான். அவ்ளோ எதிர்பார்ப்பு...

இருக்காதா பின்னே? ராவணனுக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடனும் பொருள் செலவுடனும் தயாரிக்கப்படும் படம் இதுதானே?

முன்பு பொங்கல் ரிலீஸ், தீபாவளி ரிலீஸ் என்றெல்லாம் பேசப்பட்ட "எந்திரன்' ஆகஸ்ட் மாதமே கூட ரிலீசானால் ஆச்சரியப்பட வேண்டாம். 7ஆம் தேதியுடன் கடைசிக் கட்டம் படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைத்து விட்டார்களாம்.

எடிட்டிங் முடிந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் தி ஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவில் பின்னணி இசை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் ஜூலை மாதக் கடைசியில் இசைத்தட்டு வெளியீடு தடபுடலாகக் கோலாலம்பூரில் நடைபெறும் என்றும் சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து செய்தி கூறுகிறது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெரிய படங்கள் எதுவும் வெளிவரும் வாய்ப்பில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இனி ஜனவரி மாதத்தில்தான். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட்டால், குறைந்தது 50 நாட்களுக்காவது படம் ஓடுவது உறுதி என்பதால் வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகத் தகவல்.

சௌந்தர்யாவின் திருமணத்திற்கு முன் "எந்திரன்' வெளியிடப்பட்டு விடுமோ என்னவோ. "எந்திரன்' கலை சம்பந்தப்பட்ட ஒன்றோ இல்லையோ, நிச்சயம் நிதி சம்பந்தபட்ட விஷயம். அதனால் இனியும் காலம் தாழ்த்த மாட்டார்கள் என்று நம்பலாம்!

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails