பேஸ்புக் தளத்தில் 50 கோடி பதிவுகள்

பேஸ்புக் தளத்தில் பதிந்துள்ளவர்களின் எண்ணிக்கை விரைவில் 50 கோடியை எட்டப் போகிறது. இது உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் 22% ஆகும்.

இது குறித்து இதனை நிறுவிய மார்க் ஸுக்கர்பெர்க் கூறுகையில், எண்ணிக்கை 100 கோடியை எட்டும் நாளும் விரைவிலேயே வரும் என்றார். பேஸ்புக் தளத்தில் பதிவு செய்து, அதிகம் பயன்படுத்துவோர் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருக்கின்றனர்.

வியட்நாம் மற்றும் சீனாவில் இது தடை செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதன் வளர்ச்சிக்கு பெரும் தடை உள்ளது. இந்தியாவில், இந்த தளம் பள்ளிகளின் பட்டியல் ஒன்றைத் தேடி அறிய உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் இதில் பதிவு செய்து நண்பர்களைத் தேடி அறிய முடிகிறது. இந்தியாவிலும் பிரேசில் நாட்டிலும், இந்த தளத்திற்குப் போட்டியாக, கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் அமைந்துள்ளது.

ஜப்பானைப் பொறுத்தவரை, அங்கு மொபைல் வழி இன்டர்நெட் பிரவுசிங் அதிகம் என்பதால், பேஸ்புக் அதற்கான தளத்தினை அமைத்து வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails