தமிழில் ரீமேக் ஆகிறது 3 இடியட்ஸ்

இந்தியில் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2009ம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் வசூலிலும் மெகாஹிட்டானது.

இப்படத்தில் மாதவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. படத்தை ரீமேக் செய்யும் உரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை ரீமேக் செய்ய ஒப்பந்தம் ஆகி உள்ளார். 3 இடியட்ஸ் படத்தின் கதை விவாதத்தில் தீவிரமாக இறங்கி உள்ளார் ஷங்கர்.

இந்தியில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில், தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கிறார். தமிழில் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார் என்ற குழப்பம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

விஜய், அமீர்கான் கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் வதந்தி பரவி உள்ளது.இந்த குழப்பத்திற்கான தீர்வை ஷங்கர் விரைவில் வெளியிடுவார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails