துவங்குகிறது தேர்தல் திருவிழா

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் துவங்குகிறது. இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சி காலம் நிறைவு பெறுகிறது. 

இதனையடுத்து வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் துவக்கப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டசபை வரும் மே மாதம் 13 ம் தேதியுடன் காலவதியாகிறது. எனவே இதற்கு முன்னதாக தேர்தல் நடத்தியாக வேண்டும். இதனால் வரும் 2011 ம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான பணிகள் குறித்து இன்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா நிருபர்களிடம் பேசினார். இவர் கூறியதாவது: வரும் 6 ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனர் நவீன்சாவ்லா சென்னை வருகிறார். இவர் தமிழக உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். 

இந்த கூட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுச்சாவடிகள் ஆய்வு குறித்து விவாதிக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில்; செப். 15 ம் தேதிக்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பபட்டு விடும்.

சமீபத்தில் காலமான காங்., சட்டசபை தலைவர் சுதர்சனம் காலமானதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்கு அங்கு தேர்தல் நடத்தப்படாது என்றார். காரணம் இன்னும் ஓராண்டுக்குள் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் இது தேவையில்லை என்றார்.

நவீன்சாவ்லா வருகையை அடுத்து தமிழகத்தில் தேர்தல் ஜூரம் துவங்கி விடும். அரசியல் காட்சிகள், அரசியல் நடை போக்குகளில் மாற்றம் காண முடியும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails