சாம்சங் தரும் புதிய போன்கள்

ஆம்னியா, பீட்ஸ், கார்பி என அடுக்கடுக்கான வரிசைகளில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வரும் சாம்சங் நிறுவனம் அண்மையில் மேலும் இரண்டு வரிசைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

மெட்ரோ என்னும் பெயரிலான வரிசையில் மெட்ரோ 5200 என்னும் மல்ட்டிமீடியா மொபைல் ஒன்று அண்மையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது 10.9 மிமீ தடிமனே உள்ள ஸ்லிம் ஸ்லைடர் போன் ஆகும். இரண்டு வண்ணங்களில் இது கிடைக்கிறது.

இதன் கேமரா 3 எம்.பி. திறன் கொண்டதாகவும் ஸ்மைல் ஷாட், பனோரமா ஷாட், பேஸ் டிடக்ஷன் தொழில் நுட்பம் மற்றும் வீடியோ ரெகார்டிங் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஜிமெயில் மற்றும் கூகுள் சர்ச் பதிந்து தரப்படுகிறது.

புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. வசதியுடன் 1 ஜிபி கார்ட் ஒன்றும் தரப்படுகிறது. இதன் குறியீட்டு விலை ரூ. 7,439. அடுத்ததாக ஷார்க் என்னும் பெயரிலான வரிசையிலும் சாம்சங் மூன்று போன்களை வெளியிட உள்ளது. எஸ் 5350, எஸ் 5550, எஸ் 3550 என்ற எண்களில் இந்த போன்கள் கிடைக்க இருக்கின்றன.

கார்பி போன்களைப் போல இந்த போன்களிலும் சோஷியல் நெட்வொர்க் இணைப்பு வசதி தரப்பட்டுள்ளது. எஸ் 5350 போன் கேண்டி பார் வடிவில், 3.2 மெகா பிக்ஸெல் கேமரா இøணைத்துத் தரப்பட்டுள்ளது. பல இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதி கொண்டுள்ளது.

எஸ் 5550 ஷார்க் 2 போனில் 5 மெகா பிக்ஸெல் போன், விநாடிக்கு 30 பிரேம் அளவில் வீடியோ ரெகார்டிங் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. 8 ஜிபி வரை மெமரி நீட்டிக்கக் கூடிய வகையில் மைக்ரோ எஸ்.டி.போர்ட் மற்றும் எஸ் 5350 போல இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகளும் தரப்பட்டுள்ளன.

ஷார்க் 3 எஸ் 3550 மொபைல் ஒரு ஸ்லைடராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் 8 ஜிபி வரை மெமரி நீட்டிக்கக் கூடிய வசதி, இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த மூன்று போன்களும் விரைவில் சந்தைக்கு வர இருக்கின்றன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails