இரண்டு சிம் போன்களுக்குப் பெயர் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான இன்டெக்ஸ், அண்மையில் ஐ.என்.4495 என்ற டூயல் சிம் மாடல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அழகான வடிவமைப்பு, பயன்படுத்து வோரை எளிமையாக வழி நடத்தும் யூசர் இன்டர்பேஸ், ஈக்குவலைசர்களுடன் நல்ல ஒலி தரும் மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, நல்ல பேட்டரி எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இது சந்தைக்கு வந்துள்ளது.
இன்டெக்ஸ் போன்களில் பார்ப்பதற்கு அழகான போனாக இது அமைந்துள்ளது. கீகள் நன்றாக இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ளன. 2.4 அங்குல அகலத் திரை240 x 320 ரெசல்யூசனில் காட்சிகளைக் காட்டுகிறது.
திரை தொடு உணர் திரையாகவும் உள்ளது. எம்.பி.4 மற்றும் 3ஜிபி பார்மட் வீடியோக்களை இதில் இயக்கலாம். இதன் மெமரியை 8 ஜிபி வரை நீட்டிக்கலாம்.
வாப் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். மூலம் நெட் இணைப்பு கிடைக்கிறது. கடிகாரம், கால்குலேட்டர் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
இதில் தரப்பட்டுள்ள பேட்டரி, எதிர்பார்ப்பதைக் காட்டிலும் கூடுதலான நேரம் இயங்குகிறது. இதன் குறியீட்டு விலை ரூ.4,200
0 comments:
Post a Comment