எந்த இணையதளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அன்றைய செய்திகள் தாமாக ஓடிவரும் வசதியை, "தினமலர்' அறிமுகப்படுத்தி உள்ளது.
இன்டர்நெட்டில், "தினமலர்' தரும் செய்திகளைப் படிக்க, ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை மூடிவிட்டு, "தினமலர்' வெப்சைட்டுக்குச் சென்று பார்க்க வேண்டிய அவசியம், இனி இல்லை.
எந்த வெப்சைட்டை பார்த்துக் கொண்டிருந்தாலும், "தினமலர்' செய்திகள், கண்களை உறுத்தாமல், அந்தத் திரையில் ஓடிக்கொண்டே இருக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டின், "டூல்பாரில்' "தினமலர்' செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும்.
அவற்றில் ஏதேனும் ஒரு செய்தி கவனத்தை ஈர்த்தால், அந்த இடத்தில், "கிளிக்' செய்தால் போதும். "தினமலர்' தளம் திறக்கப்பட்டு, அந்தச் செய்தி காட்டப்படும்.இது மட்டுமல்ல; அன்றைய, "தினமலர்' செய்தித்தாளில் உள்ள அத்தனை அம்சங்களையும் அறிய, "செய்திகள், பிற பகுதிகள், மற்றவை' என மூன்று மெனுக்களுக்கான கட்டங்களும் பிரவுசரில் இருக்கும்.
இவற்றை கிளிக் செய்தால், அன்றைய செய்திகள் மற்றும் "தினமலர்' நாளிதழின் சிறப்பம்சங்களான டீக்கடை பெஞ்சு, டவுட் தனபாலு, கார்ட்டூன்ஸ், இது உங்கள் இடம், பக்கவாத்தியம் போன்றவற்றைப் பெறலாம்.இதோடு நிற்கவில்லை; இனி தகவல்களைத் தேட கூகுள் தளத்தை திறந்து பார்க்க வேண்டியதில்லை.
"டூல் பார்' வசதி பெறப்பட்ட பிறகு, ஏற்கனவே பார்த்துக்கொண்டிருக்கும் பிரவுசரிலேயே, "தினமலர்' தேடல் விண்டோ ஒன்று தரப்படும். கூகுள் வழி தேடலை இதிலிருந்தே மேற்கொள்ளலாம்.இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் என எல்லா பிரவுசரிலும் இந்த வசதி கிடைக்கும்.
0 comments:
Post a Comment