நோக்கியா வழி காட்டுகிறது

நீங்கள் நோக்கியாவின் மொபைல் ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்திருக்கிறீர்களா? அப்படியானால் இந்திய நகரங்களில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல போனில் அதற்கான வழி இலவசமாகவே கிடைக்கும்.

உலகில் அதிக அளவில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கி, இந்தியாவில் 60 சதவீதம் மொபைல் போன் விற்பனைப் பங்கினைக் கொண்டிருக்கும் நோக்கியா, ஜனவரி 20 முதல் இந்த வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருகிறது.

84 நகரங்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது. இந்த நகரங்களில் பல லட்சக்கணக்கான அடையாள இடங்கள் சுட்டிக் காட்டப்பட்டு வழி காட்டப்படுகின்றன. அதுவும் முப்பரிமாணமாகக் கிடைக்கிறது. வண்டிகளை ஓட்டுபவர்களுக்குச் சாலைகளும், குறுக்குச் சந்துகளும் காட்டப்படுகின்றன.

நடந்து செல்பவர்களுக்கு சுருக்கு வழிகள் காட்டப்படுகின்றன. உலக அளவில் 74 நாடுகளில் 46 மொழிகளில் இந்த வழி நடத்தும் சேவை காட்டப்படுகிறது.

மோட்டாரோலாவின் சில மொபைல் போன்களில், கூகுள் இவ்வாறு வழிகாட்டும் சேவையை வழங்கத் தொடங்கியதை முன்னிட்டு, அதற்குப் போட்டியாக வெகு நாள் திட்டமிட்டு, நோக்கியா இந்த சேவையினை வழங்கத் தொடங்கியுள்ளது.

மேலும் ஸ்மார்ட் போன் விற்பனையைப் பொறுத்த வரை, நோக்கியாவைக் காட்டிலும் ஆர்.ஐ.எம். மற்றும் ஆப்பிள் போன்கள் முதல் இடங்களில் உள்ளன. இதனால் நோக்கியா தன் ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியைத் தந்து போன் விற்பனையை உயர்த்த திட்டமிடுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஜி.பி.எஸ். இணைப்புடன் எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போனையும் பயன்படுத்தும் ஒருவர், போனில் இன்டர்நெட் இணைப்பு பெற்று கூகுள் மேப் மூலம் வழிகாட்டும் வசதியை இலவசமாகப் பெறலாம்.

ஆனால், கூகுள் தரும் வசதி, நோக்கியா மேப்ஸ் போல ஒவ்வொரு திருப்பத்தையும் காட்டுவதில்லை. மேலும் நோக்கியாவின் மேப் வசதியை போனில் டவுண்லோட் செய்து வைத்துக் கொண்டு, இன்டர்நெட் இணைப்பு பெறாமலும், நெட்வொர்க் கிடைக்காத இடத்திலும் பயன்படுத்தலாம்.

இந்த வசதியுடன் பன்னாட்டளவில் இந்த வகை வழிகாட்டும் அமைப்பான லோன்லி பிளானட் என்னும் தள வசதியும் ஸ்மார்ட் போனில் தரப்படுகிறது. இந்த தள வசதி இந்தியாவில் கிடைக்கிறது. இதில் 84 நகரங்களுக்கு வழிகாட்டல் உள்ளது.

உணவு விடுதிகளுக்கான டிஜிட்டல் வழிகாட்டல், சீதோஷ்ணநிலை அப்டேட் ஆகியவையும் தரப்படுகின்றன. வருங்காலத்தில் இந்த வசதி தரப்படும் போது விளம்பரங்களும் இணைக்கப் படும் என நோக்கியா தலைமை அதிகாரி தனேஜா தெரிவித்தார்

1 comments:

butterfly said...

it is very useful to update what is new in electronic market.... pls update what is flipboard

Post a Comment

Related Posts with Thumbnails