இந்திய சுதந்திர தினம் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் தனது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினார். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் சுதந்திர தின உரையை கூடியிருந்தவர்கள் முன் அவர் படித்தார்.
சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், சிகாகோ, ஹூஸ்டன் ஆகியவற்றில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங்களிலும் சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தூதரக அலுவலகங்கள் மட்டும் அல்லாது சிறு நகரங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள், கோயில்கள், சமூக மையங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்திய தேசிய கீதம் விண்ணைப் பிளந்தது.
மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு எல்லா இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாரக் கடைசி நாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் கலாசாரம் கொண்ட அமெரிக்கர்கள் வேறு நிகழ்ச்சிகளை விடுத்து எல்லா இடங்களிலும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் அதிக அளவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment