விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரான செல்வராசா பத்மநாதன் நேற்று முன்தினமே கோலாலம்பூரிலிருந்து மலேசிய உதவியுடன் இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் "கடத்தப்பட்டதாக" தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று முன்தினம் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது அவர் "கடத்தப்பட்டதாக" அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. இந்தக் கடத்தலுக்கு வல்லரசு ஒன்றின் ஆதரவும் இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் வைத்து பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு வட்டாரங்கள் நேற்று கொழும்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இந்தக் "கடத்தலில்" மலேசிய அரசுக்கு இருக்கும் தொடர்பை மறைக்கவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே நேற்று பத்மநாதன் கொழும்பு அழைத்துவரப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment