அரசியலில் நுழைய எனக்கு விருப்பம் உண்டு என்று என நடிகர் விஜய் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
மாணவிகளின் கேள்விக்கு விஜய் அளித்த பதில்:
2020-ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கூறியுள்ளார். ஏன் 2015-ல் வல்லரசு ஆகக்கூடாது?
விஜய்: இந்தியாவில் படித்து விட்டு இங்கேயே வேலை செய்தால் 2020 என்ன 2010-ல்கூட இந்தியா வல்லரசாக மாறும்.
50-வது படம் எப்படி இருக்கும்?
விஜய்: எனது 50-வது படம் கில்லி, யூத் போன்று இருக்காது. வேட்டைக்காரன் சற்று மாறுபட்ட கதையம்சம் கொண்ட புதுமாதிரியாக இருக்கும். நடனம், இசை, பாடுவது போன்றவை நான் கற்றுக்கொண்டதல்ல. எனக்கு கேள்வி ஞானத்தால் வந்தது.
இந்த மக்கள் இயக்கம் ஆரம்பித்ததற்கு அடிப்படை அரசியலா?
விஜய்: அரசியலில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது நேரம் இல்லை. அதற்கான காலமும் இதுவல்ல. வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன். அரசியல் ஒரு கடல். அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியன் மாதிரி வேடங்களில் ஏன் நடிக்கவில்லை?
விஜய்: அது வயதான வேடம். நான் இளைஞன். அதனால் இளைஞர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
என்னை சினிமாவில் நடிக்க வைப்பீர்களா என்று மாணவர் ஒருவர் கேட்டதற்கு, முதலில் படி, உன் தாய், தந்தையர்க்கு மகனாக இரு. பின்னர் பார்க்கலாம். நான் பள்ளியில் படிக்க ஆசையாய் இருக்கிறது என்றால் பள்ளிக்கு செல்ல முடியுமா அதுபோலத்தான். அந்த வயது வரும்போது சென்னைக்கு வா, உன்னை நடிக்க வைக்கிறேன் என்றார்.
இதையடுத்து முதல்வர் வெ.வைத்திலிங்கம் பேசுகையில், விஜய் புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு நிறைய அறிவுரைகள் வழங்கியுள்ளார். அவற்றை முறையாகப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
வரவேற்பு: முன்னதாக, புதுச்சேரி வந்த விஜய்க்கு, மாநில எல்லையான கோரிமேட்டில் புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் தலைமை நற்பணி மன்றம் சார்பில் தலைவர் புஸ்ஸி என்.ஆனந்த் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
0 comments:
Post a Comment