முட்டை மசாலா

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:

முட்டை: 10

இஞ்சி விழுது: 1 தேக்கரண்டி

வெங்காயம்: 250 கிராம்

பச்சை மிளகாய்: 10

தக்காளி: 250 கிராம்

சீரகம்: 2 தேக்கரண்டி

மிளகாய் தூள்: 2 தேக்கரண்டி

எண்ணெய்: 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்: 2 தேக்கரண்டி

உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை: தேவையான அளவு
செய்முறை
முட்டை மசாலா
செய்முறை:

முட்டையை அவித்து ஆற வைக்கவும். ஓடு நீக்கி வெள்ளைக் கருவை பொடியாக நறுக்கவும். மஞ்சள் உதிர்த்து வைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கவும்.

நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், முட்டை வெள்ளை, மஞ்சள் கரு, உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்க விடவும். சப்பாத்திக்கு முட்டை மசாலா சுவையாக இருக்கும்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails