மத்திய அரசு வெளியிடும் எந்த ஒரு அறிவிப்பின் தாக்கமும் பங்குச் சந்தையில் எதிரொலிக்கும். அதனடிப்படையில் வியாழக்கிழமை வெளியான புதிய அன்னிய வர்த்தகக் கொள்கை முதலீட்டாளர்களைக் கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்.
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஸ்திரமற்ற நிலை காணப்பட்டபோதிலும் புதிய கொள்கையால் ஏற்றமும் இல்லை, வீழ்ச்சியும் இல்லை என்றே கூற வேண்டும்.
முக்கிய நிறுவனங்களான விப்ரோ, ஏர்டெல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.
இருப்பினும் காலையிலிருந்து ஏற்பட்ட சரிவு தடுத்து நிறுத்தப்பட்டதால் 11 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து குறியீட்டெண் 15,781 புள்ளிகளாக இருந்தது. இதனால் தொடர்ந்து 6-வது நாளாக பங்குச் சந்தை ஏறுமுகத்தைச் சந்தித்தது என்றே கூறலாம். கடந்த நான்கு மாதங்களில் பங்குச் சந்தை தொடர்ந்து 6 நாள்கள் முன்னேற்றத்தைச் சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
வியாழக்கிழமை வெளியான புதிய அன்னிய வர்த்தகக் கொள்கையில் பல்வேறு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தகத்துக்கு வரிச் சலுகைகளை மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா அறிவித்தார். இதனால் ஜவுளித்துறை பங்குகள் மட்டும் கணிசமான முன்னேற்றத்தைச் சந்தித்தன. ஆனால் பங்குச் சந்தையில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் அடைய உதவவில்லை என்றே சொல்ல வேண்டும்.
நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. ஏற்றுமதி அடிப்படையிலான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனப் பங்கு விலை 4.65 சதவீதம் உயர்ந்தது. இதேபோல ராஜேஷ் ஏற்றுமதி நிறுவனப் பங்கு விலை 8.58 சதவீதமும், விடியோகான் பங்குகள் 8.51 சதவீதமும், டைட்டன் இந்தியா பங்கு விலை 3.21 சதவீதமும் உயர்ந்தன.
தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கு விலை 2.74 சதவீதம் அதிகரித்தது. தென்னாப்பிரிக்காவின் எம்டிஎன் குழும நிறுவனமும் பார்தி ஏர்டெல் நிறுவனமும் ஒன்றாக இணைய ஒப்புக் கொண்டதை அடுத்து இந்நிறுவனப் பங்கு விலை உயர்ந்தது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ பங்குகள் 2.01 சதவீதம் உயர்ந்தது. டாடா பவர் 1.70 சதவீதமும், எல் & டி 1.56 சதவீதமும், ஸ்டெர்லைட் 1.45 சதவீதமும், பிஎச்இஎல் 1.34 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்கு விலை 1.20 சதவீதமும் உயர்ந்தன.
தனியார் துறையில் அதிக அளவில் உருக்கு உற்பத்தி செய்யும் டாடா ஸ்டீல் நிறுவனப் பங்கு விலை 5.14 சதவீதம் சரிவைச் சந்தித்தது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மாதத்தில் இந்நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நஷ்டம் ரூ. 2,238.53 கோடி என அறிவித்தது. இதனால் இந்நிறுவனப் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.
டாடா மோட்டார் நிறுவனப் பங்கு விலை 2.55 சதவீதமும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு 1.77 சதவீதமும், டிஎல்எஃப் நிறுவனப் பங்கு 1.68 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் 1.50 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
மொத்தம் 1,638 நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன
0 comments:
Post a Comment