கல்லூரியில் மூன்று பேராசிரியர்கள் கொல்லப்படுகின்றனர். அக்கல்லூரியில் மாணவனாக சேர்கிறார் போலீஸ் அதிகாரி சிவகிரி. கொலைக்கு சில மாணவர்கள் காரணமாக இருப்பதை கண்டுபிடித்து கைது செய்கிறார்.
இன்னொரு புறம் ரிஷா செல்போனில் குறிப்பிட்ட ஒருவரை கொல்லப்போவதாக கிராஸ்டாக் வருகிறது. அது பற்றி சிவகிரிக்கு சொல்கிறார். போலீசாரை அவர் உஷார்படுத்துகிறார். அதற்குள் அந்த நபர் சாகடிக்கப்படுகிறார்.
பள்ளியில் குண்டு வைத்திருப்பதாக இன்னொரு கிராஸ் டாக்கும் வருகிறது. அந்த பள்ளிக்கூடத்தில் போலீஸ் படையுடன் முகாமிட்டு துருவி துருவி தேடுகிறார். ஆனால் குண்டு எதுவும் இல்லை. குண்டுக்கு பயந்து மாணவர்கள் வெளியே ஓடும் போது மூன்று சிறுவர்கள் பலியாகின்றனர். பொய் தகவல் கொடுத்ததாக ரிஷாவை எச்சரிக்கிறார்.
சமூக விரோத காரியங்களில் ஈடுபடும் நபரை தீவிரமாக தேடுகிறார் சிவகிரி.
அப்போது கொலையாளி தனது நண்பன் குகன் என்ற அதிர்ச்சி தகவல் கிடைக்கிறது. நண்பனுடன் மோதி அழிப்பது கிளைமாக்ஸ்...
குண்டு உடம்புடன் கல்லூரி மாணவராக வரும் சிவகிரி கேணையாக நடந்து சிரிக்க வைக்கிறார். போலீஸ் அதிகாரி கெட்டப்புக்கு மாறியதும் மிடுக்கு.
தொழில் அதிபர் கொலை பள்ளிக்குள் நடக்கும் வெடிகுண்டு சோதனைகள் பரபரக்கின்றன. திரைக்கதை வலுவில்லாமல் நகர்வது குறை.
சமூக விரோத கும்பல் தலைவன் நண்பன் என தெரிய வருவது திருப்பம். காட்சிகளில் விறுவிறுப்பு ஏற்றியுள்ளார் இயக்குனர் சிவாஜி. கதையில் பழமை சாயம்... ருக்ஷனா, சாந்தினி குகன் ஆகியோரும் உள்ளனர். ராஜாமணியின் ஒளிப்பதிவில் மலேசிய அழகு
0 comments:
Post a Comment