மும்பை இரட்டைக் குண்டு வெடிப்பு

மும்பையில் கடந்த 2003ம் ஆண்டு நடந்‌த இரட்டைக் குண்டு வெ‌டிப்பு தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு மும்பையில் இரு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 54 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஹனீஃப் சையது, அவரது மனைவி ஃபாமீதா, அஸ்ரத் அன்சாரி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 4-ம் தேதி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், தண்டனை அறிவிப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தண்டனைகளை வாசித்த நீதிபதிகள், குற்றவாளிகள் மூவருக்கும் வழங்கப்படுவதாக அறிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பு இருந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails