சம்போ சிவசம்போ

அனைத்து சென்டர்களிலும் ஹிட்டாகி உள்ள "நாடோடிகள்' தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. மூன்று மொழிகளிலும் சமுத்திரகனியே இயக்குகிறார். இந்த மாதம் 16-ம் தேதி தெலுங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.

படத்தின் தலைப்பு "சம்போ சிவசம்போ'. இது படத்தில் வந்த தீம் மியூசிக் பாடலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அதையே படத்தின் தலைப்பாக வைக்க முடிவெடுத்திருக்கிறார்கள். ரவி தேஜா, அல்லரி நரேஷ், சிவபாலாஜி, ப்ரியாமணி, அபிநயா நடிக்கிறார்கள்.

சசிகுமார், சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். "பூ' படத்தின் ஒளிப்பதிவாளர் முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர் சி.பாபு இசையமைக்கிறார். மற்றபடி தமிழில் நடித்த அதே நடிகர்கள் தெலுங்கிலும் நடிக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails