Thursday, August 6, 2009

கதை கேளு.. கதை கேளு..!

தன்னிடம் கதை சொல்லி புக் செய்ய வரும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை "அங்கு வாருங்கள்; இங்கு வாருங்கள்' என அலைக்கழிப்பதாக ஜெனீலியாவைப் பற்றி சினிமா வட்டாரத்தில் பேச்சு. இது பற்றி கேட்டால்...

""தற்போது தெலுங்கில் மூன்று படங்களிலும் ஹிந்தியில் நான்கு படங்களிலும் பிஸியாக உள்ளேன். அதனால் என்னைப் பார்க்க வரும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை நான் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரச் சொன்னேன். பெரும்பாலும் மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களில்தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு வந்துதான் எல்லோரும் கதை சொல்கிறார்கள்.

சமீபத்தில் கூட ஒரு தமிழ்ப் பட தயாரிப்பாளர் ஹைதராபாத்தில் நான் இருந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துள்ளார். உண்மை இப்படி இருக்கும்போது "கதை சொல்ல வருபவர்களை நான் அலைய வைக்கிறேன்' என்று சொல்வதெல்லாம் கட்டுக் கதையே'' என்கிறார் ஜெனீலியா.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...