பன்றி காய்ச்சல்: சென்னை மீனவர் பலி

சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட வேளச்சேரியை சேர்ந்த 4 வயது சிறுவன் சஞ்சய் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தான். நேற்று சென்னையில் மேலும் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். அவரது பெயர் பிரான்சிஸ் (வயது 49). சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த மீனவர்.

காய்ச்சல் சளி, இருமல் காரணமாக கடந்த 19-ந் தேதி மதியம் 3.40 மணிக்கு இவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள் ரத்தம், சளி மாதிரியை எடுத்து கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று மதியம் பரிசோதனை முடிவு வந்ததில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பிரான்சிஸ்சுக்கு தனி வார்டில் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8 மணிக்கு அவர் இறந்துவிட்டார்.

இது பற்றி உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்தனர். பிரான்ஸ் சிஸ் உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

பிரான்சிஸ் ஊர் ஈஞ்சம்பாக்கம் என்பதால் அந்த பகுதி முழுவதும் உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் டாக்டர்கள் தீவிர பரிசோதனை நடத்தி வருகின்றனர்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails