Monday, August 31, 2009

கேள்விக்கு பதில் சொன்னால் மரண தேதியை சொல்லும் இணைய தளம்

கேள்விக்கு பதில் சொன்னால் மரண தேதியை சொல்லும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள கார்னஜிக் மெல்லன் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் “ஹெத்ரிக் ரேங் கிங்ஸ் டாட்காம்” என்ற பெயரில் இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

இந்த இணைய தளத்துக்குள் சென்றால் பல்வேறு கேள்விகள் இருக்கும் அதற்கு பதில் அளித்தால் அவர்களுக்கு எப்போது மரணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை சொல்கிறது.

நமது உடல் நிலை, நாம் வசிக்கும் இடத்தின் பூகோள ரீதியான சூழ்நிலை, நமது பிறந்த தேதி போன்ற விவரங்களை கேட்கும். கேள்விகளில் இருந்து ஆய்வு செய்து மரணம் சம்பவிக்கும் காலத்தை சொல்லும்.


ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்த நோயினால் அதிகம் பேர் மரணத்தை சந்திப்பார்கள் வயதி வாரியாக நடக்கும் மரணங்கள் போன்ற விவரங்களையும் இந்த இணைய தளம் சொல்கிறது.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...