10-ம் வகுப்பு தேர்வு: மையங்கள் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு அக்டோபர் 2009 தேர்வுக்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகளுக்கான மண்டலத் துணை இயக்குநர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

10-ம் வகுப்பு அக்டோபர் 2009 தேர்வு தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அம்பத்தூர், செங்குன்றம், பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, திருவள்ளூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், ராயபுரம், புரசைவாக்கம், பெரம்பூர், அண்ணாநகர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில், தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள இடங்களைத் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் (EXAMINATION CENTRE) என்ற இடத்தில் பெரிய எழுத்துக்களில் குறிப்பிட வேண்டும்.

அருகில் உள்ள இடத்தைத் தேர்வு செய்து, வீண் சிரமத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails