இதயம் துடிக்கும்போதே ஆபரேஷன்

இதய அறுவைச் சிகிச்சையில் இரண்டு முறைகள் உள்ளன. துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வது, மற்றொன்று இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்வது.

இதயத்தை நிறுத்தி அறுவைச் சிகிச்சை செய்வது என்பதுதான் பரவலாகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை. இதில் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வார்கள். அப்போது இதயம் செய்யும் பணியை இதய - நுரையீரல் இயந்திரம் (HEART - LUNG MACHINE) செய்யும். இம் முறையில் வெளியிலிருந்து ரத்தம் செலுத்த வேண்டும்.

இதனால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்குப் பல்வேறு சிரமங்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஆனால் இதயத்தை நிறுத்தாமல் துடித்துக்கொண்டிருக்கும்போதே அதன் இயக்கத்துக்கு இடையூறு செய்யாமல் அறுவைச் சிகிச்சை செய்வது "பீட்டிங் ஹார்ட் சர்ஜ' (Beating Heart Surgery) ஆகும்.

இச் சிகிச்சை முறையில் நோயாளிக்கு ரத்தம் செலுத்தும் தேவை 99 சதவீதம் இருக்காது. இதனால் அறுவைச் சிகிச்சைக்கு முன்பு ரத்தம் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை. ரத்தம் வாங்கும் செலவும் மிச்சம். சர்க்கரை நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் முதியவர்களுக்கும் "பீட்டிங் ஹார்ட் சர்ஜ'யில் ஆபத்து மிகவும் குறைவு. இச் சிகிச்சை முறையில் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய உடல் நல விளைவுகள் மிகக் குறைவு.

இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்வதற்கு தேர்ந்த பயிற்சியும் அனுபவமும் வேண்டும். எல்லோராலும் செய்துவிட முடியாது.

பொதுவாக பை - பாஸ் அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 1.25 லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதயம் துடித்துக் கொண்டிருக்கும்போதே பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்வதால் படுக்கைக் கட்டணம் உள்பட அனைத்துக்கும் சேர்த்து சென்னை மியாட் மருத்துவமனையில் மொத்தம் ரூ. 1 லட்சம் மட்டுமே செலவாகும்.

ரத்தத்தில் இயல்பான அளவுகள்

ரத்தத்தில் மொத்த கொழுப்புச் சத்து, நல்ல கொழுப்புச் சத்து, கெட்ட கொழுப்புச் சத்து, யூயா, கியாட்டினின் ஆகியவற்றின் இயல்பான அளவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மொத்த கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் இயல்பான அளவுக்கு மீறினால் இதய நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். அதுபோல் ரத்தத்தில் யூயா, கியாட்டினின் ஆகியவற்றின் அளவு அதிகத்தால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும். எனவே கவனம் தேவை.

ரத்தத்தில் மொத்த கொழுப்பு(வெறும் வயிற்றில்)- 150 மி.கி. - 250 மி.கி. (100 மி.லி. ரத்தத்தில்)

கெட்ட கொழுப்பு (எல்.டி.எல்)(வெறும் வயிற்றில்)- 160- மி.கி. க்கும் குறைவாக ,,

நல்ல கொழுப்பு (எச்.டி.எல்.) (வெறும் வயிற்றில்)- 35-மி.கி.-க்கு அதிகமாக ,,

ட்ரைகிளிசைரைட்ஸ் கொழுப்பு (வெறும் வயிற்றில்)- 10-மி.கி. - 180 மி.கி. வரை ,,

விஎல்டிஎல் கொழுப்பு (வெறும் வயிற்றில்)- 30-மி.கி.-க்கும் குறைவாக ,,

யூயா 15-மி.கி. - 40- மி.கி. வரை ,,

கியாட்டினின் 0.6-மி.கி. - 1.3-மி.கி. வரை

பரபரப்பு: "ஹைபர் டென்ஷன்'கூடும்

நமது உடல் முழுவதும் ரத்தக் குழாய்கள் உள்ளன. உடல் முழுவதுக்கும் இக் குழாய்கள் மூலம் ரத்தம் அனுப்பும் பணியைக் கருவின் மூன்றாவது மாத்திலிருந்து இதயம் செவ்வனே செய்துகொண்டிருக்கிறது. உடல் முழுவதும் ரத்தம் சீராகச் செல்ல ரத்த அழுத்தம் (Blood Pressure)இயல்பானதாக இருக்க வேண்டும். குழந்தை முதல் பெயவர் வரை ரத்த அழுத்த அளவு இயல்பாகவே வித்தியாசப்படும். இதற்கு ரத்தக் குழாய் அமைப்பு ரீதியான காரணம் உண்டு.

"சிஸ்டாலிக்', "டயஸ்டாலிக்': இதயத் தசை சுருங்கி (Contracts) பிரதான அயோட்டா ரத்தக் குழாய் வழியாக உடல் முழுவதுக்கும் ரத்தத்தை "பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே "சிஸ்டாலிக்' (Systolic Blood Pressure)எனப்படும். அதாவது ரத்த அழுத்தம் பார்க்கும்போது மருத்துவர் குறிப்பிடும் உயர் நிலை அழுத்தமே "சிஸ்டாலிக்' ஆகும். இந்த உயர் நிலை ரத்த அழுத்தம் பெயவர்களுக்கு இயல்பாக 140 எம்எம் எச்ஜி-வரை இருக்கலாம்.

ரத்தத்தை சப்ளை செய்ய சுருங்கிய இதயத் தசை மீண்டும் விவடையும்போது (Relaxing) ஏற்படும் ரத்த அழுத்தமே "டயஸ்டாலிக்'(Diastolic Blood Pressure) எனப்படும். அதாவது, ரத்தத்தை இதயம் "பம்ப்' செய்யும் ஒவ்வொரு விநாடியும், அதற்கு இணையாக விறைப்பாக எதிர்த்திசையில் சிறு சிறு ரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தமே(Resistance) "டயஸ்டாலிக்' எனப்படும். இந்த கீழ் நிலை ரத்த அழுத்தம் பெயவர்களுக்கு இயல்பாக 90 எம்எம் எச்ஜி - வரை இருக்கலாம்.

இதயத் துடிப்பு: இதயத்தின் செயல்பாட்டுக்கு இதயத் துடிப்பு (Heart Rate)அவசியம். ஒரு நிமிஷத்துக்கு இதயம் 72 முதல் 100 முறை துடிக்கிறது. ஒரு துடிப்புக்கு இதயம் எடுத்துக்கொள்ளும் நேரம் 0.8 விநாடிகள் மட்டுமே. இதில் ரத்தத்தை பம்ப் செய்ய அது சுருங்க ("சிஸ்டாலிக்' அழுத்தம்) எடுத்துக்கொள்ளும் நேரம் 0.3 விநாடிகள்; விவடைவதற்கு ("டயஸ்டாலிக்' அழுத்தம்) எடுத்துக்கொள்ளும் நேரம் 0.5 விநாடிகள். ஆக, இதயம் நன்றாகச் செயல்பட "சிஸ்டாலிக்' (உயர் நிலை அழுத்த அளவு), "டயஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்த அளவு) இரண்டும் சீராக இருப்பது அவசியம். அதாவது உயர் நிலை ரத்த அழுத்த அளவு 140 வரை இருக்கலாம்; கீழ் நிலை ரத்த அழுத்த அளவு 90 வரை இருக்கலாம்.

உயர் ரத்த அழுத்த நோய் (Hypertension): ரத்தக் குழாய்களில் மேற்சொன்ன அழுத்த அளவுகளுக்கு அதிகமாக ரத்தம் செல்லும் நிலையில் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளதாகக் கருதப்படும். ரத்த அழுத்த மானி மூலம் மூன்று தடவை (வெவ்வேறு தினங்களில்) ரத்த அழுத்த அளவைப் பசோதிக்கும் நிலையில், இயல்பான அளவுகளைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது உறுதியாகிவிடும். இதயத்தின் வேலைச் சுமை அதிகமாகிவிட்டது என்று அர்த்தம்.

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் உறுப்புகள்

கீழ் நிலை ரத்த அழுத்த அளவைப் பொருத்து...: உயர் நிலை ரத்த அழுத்த அளவு ("சிஸ்டாலிக்') 140-க்கு மேல் சென்றுவிட்டாலே உஷார் அடைவது அவசியம். எனினும் இதய மருத்துவர்களைப் பொருத்தவரை கீழ் நிலை ரத்த அழுத்த அளவை ("டயஸ்டாலிக்') முக்கியமாகக் கருதுகின்றனர். அதாவது "டயஸ்டாலிக்' அளவு 90-ஐத் தாண்டிவிட்டாலே "ஹைபர்டென்ஷன்' நோய்க்கான சிகிச்சை தொடங்கி விடும்.

நான்கு அளவுகள்: கீழ்நிலை ரத்த அழுத்த அளவை ("டயஸ்டாலிக்') பொருத்து நோயின் தன்மையை மருத்துவர்கள் கணிக்கின்றனர். அதாவது டயஸ்டாலிக் அளவு 90-ஐத் தாண்டி 95-க்குள் இருந்தால் நோயின் ஆரம்ப நிலையில் (Border Line) இருக்கிறோம் என நோயாளி கருத வேண்டும்; 95 முதல் 104 வரை இருந்தால் ஆரம்ப நிலையைத் தாண்டி லேசான பாதிப்பு (Mild) உள்ளதாகக் கொள்ளலாம்; 105 முதல் 114 வரை இருந்தால் ஓரளவு பாதிப்பு (Moderate) இருப்பதாகக் கொள்ளலாம்.

டயஸ்டாலிக் அளவு 115-க்கு மேல் இருந்தால் கடும் பாதிப்பு (Severe)நிலையில் இருப்பதாகக் கொள்ள வேண்டும். கடைசியில் கூறப்பட்டுள்ள அளவு, இதயத்துக்கு அபாய கட்டம். இத்தகைய அபாய கட்ட அளவை அடைந்து, நிலைமை மோசமாகாமல் இருக்க டயஸ்டாலிக் அளவு 90-ஐத் தாண்டிய உடனேயே சிகிச்சையைத் தொடங்கிவிடுவது அவசியம்.

அறிகுறிகள் என்ன?: மூக்கிலிருந்து ரத்தம் கசிதல், தலைவலி, குறிப்பாக பிடயில் வலி, தலை சுற்றல், சோர்வு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள்.

அறிகுறிகள் இன்றி...: பெரும்பாலானோருக்கு உயர் ரத்த அழுத்த நோய் அறிகுறிகள் இன்றி இருக்கும். மேற்சொன்ன அறிகுறிகள் எதுவும் இன்றி திடீரென தலை சுற்றல் வரும்போதுதான் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பதே தெய வரும். இதேபோன்று கண் பார்வை மங்கும்போது, கண்ணைப் பசோதனை செய்யும் நிலையில் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பது தெயும். சிறுநீரகம் தொடர்பான நோய் வரும் நிலையில் சோதனையின் மூலம் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெய வாய்ப்பு உண்டு.

இதயம், கண்கள், மூளை, சிறுநீரகங்கள்: அறிகுறிகள் இன்றி இருக்கும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இதயம், கண்கள், மூளை, சிறுநீரகங்கள், உடல் முழுவதும் உள்ள ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உயர் ரத்த அழுத்த நோய் காரணமாக ரத்தக் குழாய்களின் "எலாஸ்டிக்' தன்மை போகும்; ரத்தக் குழாய்களின் சுவன் மிருதுத் தன்மை கடினமாகும்; இதனால் கொழுப்புப் பொருள்கள் சுவல் கெட்டியாகப் படிய வாய்ப்பு ஏற்படும். ரத்தக் குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும்.

இதயத் தசை வலுவிழத்தல்: உயர் ரத்த அழுத்த நோய் காரணமாக அதிகமாக வேலை செய்து, இதயத் தசை வலுவிழக்க ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலைக்கு இதயத் தசை தள்ளப்பட்டு (Heart Failure) மரணம் ஏற்படும். பக்கவாதம்: உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி, பக்கவாதம் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்த நோயே முக்கியக் காரணம். இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்லும் குழாயில் எவ்விதப் பிரச்சினையும் வரக்கூடாது. ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் நிலையில் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படலாம். இதனால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பார்வை பறிபோகும்: உயர் ரத்த அழுத்த நோய் காரணமாக விழித் திரையில் (Retina) உள்ள ரத்தக் குழாய்களில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். விழித் திரையில் வெண்மையான நிறம் படியத் தொடங்கும். பொதுவான கண் பசோதனையின்போதுதான் இந்த மாற்றங்கள் தெயவரும். தொடர்ந்து அலட்சியமாக இருந்தால் விழத் திரை ரத்தக் குழாய்களில் ரத்தம் கசியத் தொடங்கி, பார்வை பறிபோகும் ஆபத்தும் உண்டு.

சிறுநீரகங்கள்: உடலின் ரத்த அழுத்தத்தைப் பராமப்பதில் சிறுநீரகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான உப்பு ("சோடியம்') உள்பட கழிவுப் பொருள்கள், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறுகின்றன. இதில் சிறுநீரகங்களின் பங்கு அதிகம். உயர் ரத்த அழுத்த நோய் காரணமாக உடலில் உள்ள உப்பை வெளியேற்றும் திறனை சிறுநீரகங்கள் இழக்கின்றன. இதனால் உப்பு வெளியேறாமல் உடலிலேயே தங்குகிறது. விளைவு, சிறுநீரக ரத்தக் குழாய்கள் உள்பட அனைத்து ரத்தக் குழாய்களிலும் பாதிப்பு ஆரம்பிக்கிறது. தொடர்ந்து அலட்சியமாக இருக்கும் நிலையில் சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure)வரை செல்லும் ஆபத்து உண்டு. கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய் காரணமாகவும் ரத்த அழுத்த அளவு அதிகக்கும்.

காரணங்கள் என்ன?

சர்க்கரை நோயைப் போன்று பாரம்பயத் தன்மை காரணமாக உயர் ரத்த அழுத்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. பரபரப்பான வாழ்க்கைச் சூழல், உணவில் உப்பு உள்பட உப்பு உள்ள பண்டங்களை அதிமாகச் சேர்த்துக் கொள்ளுதல், புகை பிடித்தல், மதுப் பழக்கம், உடல் பருமன் ஆகியவை காரணமாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

பரபரப்புத் தன்மை: சவால் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கு பரபரப்புத் தன்மை உள்ளது. நன்கு சிந்தித்து அன்றாட நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக் கொள்வதன் மூலம் பரபரப்பைக் குறைத்துக் கொள்ள முடியும்.என்றைக்காவது ஒரு நாள் பரபரப்படைந்தால் தவறில்லை. தொடர்ந்து ஒருவர் பரபரப்படைந்தால் தொடர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலன் கெடும். ரத்தக் குழாய்கள் சுருங்கும்.

அப்பளம் வேண்டாம் - டென்ஷனும் புகையும்:

பரபரப்புக்கும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. டென்ஷன் ஆகும் போதெல்லாம் சிகரெட் பாக்கெட் காலியாகிக் கொண்டே இருக்கும். தாம் கஷ்டப்படுவதை வெளியே சொல்ல முடியாத இதயம், ஓசையின்றி பாதிப்புக்குள்ளாகிக்கொண்டே வரும். இதேபோன்றுதான் மதுப் பழக்கமும். மதுவுடன் சேர்த்து உப்பு நிறைந்த சிப்ஸ் உள்பட கொழுப்பு நிறைந்த உணவுப் பண்டங்கள் வயிற்றுக்குள் செல்லும். விளைவு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் அளவுகள், இயல்பைத் தாண்டி அதிகக்கும்.

உப்பைக் குறையுங்கள்: தென்னிந்தியர்களில் மோர் சாதம் வரை உப்பு சேர்த்துக்கொள்வோர் அதிகம். உயர் ரத்த அழுத்த நோய் இருப்பது தெந்தவுடன் ஊறுகாய், சிப்ஸ், கருவாடு, பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சு சாறு ஆகியவற்றைத் தவிர்ப்பது அவசியம். இளம் வயதில் உடலில் சேரும் உப்பு, விளையாட்டு உள்பட வேகமாகச் செயல்படுவதால் எளிதில் வெளியேறி விடுகிறது. ஆனால் வயது ஆக ஆக உப்பு உடலை விட்டு வெளியேறாமல் தேங்கி தீங்கு விளைவிக்கிறது. எனவே வயதான உடனேயே உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிடுவது அவசியம்.

உப்பு அதிகமாவதால் விளைவு என்ன?: நீர், புளி, காரம், எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் சமையலில் உப்பில்லாமல் ருசி கிடைக்காது. இதனால்தான் ரசம், வற்றல் குழம்பு, அசைவ உணவில் சிக்கன் - மட்டன் ஆகியவற்றில் உப்பின் பங்கு அதிகம். குறிப்பாக கெடாமல் பாதுகாக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில் உப்பு அதிகமாக இருக்கும். உப்பு அதிகமாவதால் சிறுநீரகங்களில் ஒரு வித ஹார்மோன் உற்பத்தியாகத் தொடங்கும். இதனால் ரத்த அழுத்தம் அதிகக்கும். எனவே நாக்கைக் கட்டுப்படுத்தினால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

குறிப்பாக தந்தைக்கோ அல்லது தாய்க்கோ உயர் ரத்த அழுத்த நோய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உப்பு உள்பட உப்பு நிறைந்த உணவுப் பொருள்களை இளம் வயதிலிருந்தே குறைத்துச் சாப்பிடுவது அவசியம். இதன் மூலம் நோய் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

சிகிச்சை என்ன?

சர்க்கரை நோயைப் போன்று உயர் ரத்த அழுத்த நோயையும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள தொடர் சிகிச்சை அவசியம். மாதத்துக்கு ஒரு முறை ரத்த அழுத்த அளவைப் பசோதித்துக் கொள்வது அவசியம். மருத்துவர் பந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். தினமும் "வாக்கிங்' செல்வதன் மூலமும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். மருத்துவர் பந்துரைக்கும் மாத்திரைகளுடன் "வாக்கிங்', பரபரபற்ற வாழ்க்கைச் சூழல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும்.

இயல்பான ரத்த அழுத்த அளவு

வயது:

உயர்நிலை ரத்த அழுத்தம்(சிஸ்டாலிக்) எம்எம்எச்ஜி

கீழ்நிலைரத்த அழுத்தம் (டயஸ்டாலிக்) எம்எம்எச்ஜி

2 ஆண்டுகள்

3 முதல் 5 ஆண்டுகள்

6 முதல் 9 ஆண்டுகள்

10 முதல் 12 ஆண்டுகள்

12 முதல் 15 ஆண்டுகள்

16 வயதுக்கு மேல் 112

116

122

126

136

140

74

76

78

82

86

90

சிஸ்டாலிக் 140-க்கும் மேலும் டயஸ்டாலிக் 90-க்கும் மேலும் இருந்தால் உயர் ரத்த அழுத்தம். சிகிச்சை அவசியம்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails