இந்திய ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 27.7 சதவீதம் சரிந்துள்ளது. சர்வதேச தேக்க நிலை காரணமாக ஏற்றுமதி தொடர்ந்து 9-வது மாதமாக சரிவைச் சந்தித்துள்ளது.
இந்திய ஏற்றுமதி பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளைச் சார்ந்தே உள்ளது. இந்நாடுகளில் பொருளாதார தேக்க நிலை இன்னமும் மீட்சியடையாததால் இந்திய ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
ஜூன் மாதத்தில் இந்திய ஏற்றுமதி 1,281 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ஏற்றுமதி வருமானம் 1,773 கோடி டாலராக இருந்தது. இறக்குமதியும் தொடர்ந்து 6-வது மாதமாக சரிவைச் சந்தித்துள்ளது. இறக்குமதி 29 சதவீதம் சரிந்து 1,897 கோடி டாலராகக் குறைந்தது.
வர்த்தகப் பற்றாக்குறை 616 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 912 கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 31 சதவீதம் சரிந்துள்ளது. ஏற்றுமதி வருமானம் 3,543 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டு இதேகாலத்தில் 5,154 கோடி டாலராக இருந்தது.
0 comments:
Post a Comment