கேடி vs கில்லாடி

"ராஜாதிராஜா' படத்தையடுத்து தான் தயாரித்து இயக்கும் புதிய படத்துக்கும் ரஜினிகாந்தின் "குரு சிஷ்யன்' டைட்டிலையே வைத்திருக்கிறார் ஷக்திசிதம்பரம்.

இதில் சத்யராஜுடன் முதல்முறையாக சுந்தர்.சி இணைந்து நடிக்கிறார். ஸ்ருதி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் "இந்திரவிழா' படத்தில் ஹேமமாலினி என்ற பெயரில் நடித்தவர். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கும் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் அளித்து படம் தயாராகிறது. ஒரு கேடிக்கும் ஒரு கில்லாடிக்கும் இடையே நடைபெறுகிற பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த சுவாரஸ்யமான போட்டிதான் கதை என்கிறார் இயக்குநர்.

தினா இசையமைக்கிறார். வழக்கம்போல ஒரு ரீமேக் இ(ம்)சைப் பாடலும் இடம்பெறுகிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails