ஆப்பிரிக்காவில் தடம் பதிக்க வி-கார்ட் திட்டம்

ஸ்டெபிலைஸர்கள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வி-கார்ட் நிறுவனம் தனது தயாரிப்புகளை ஆப்பிரிக்க நாடுகளில் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

வோல்டேஜ் ஸ்டெபிலைஸர்கள் மட்டுமின்றி கேபிள்கள், சூரிய ஒளியில் செயல்படும் ஹீட்டர்கள் ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இந்நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

இதற்காக நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் ஆரம்ப கட்ட ஆய்வுகளை இந்நிறுவனம் மேற்கொண்டது. இவ்விரு நாடுகளில் வோல்டேஜ் ஸ்டெபிலைஸர்களுக்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதகாவும் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்களுடன் பேச்சு நடத்தி வருவதாக நிறுவனத்தின் பொது மேலாளர் அந்தோனி செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் வோல்டேஜ் ஸ்டெபிலைஸர்கள் சந்தையில் 60 சதவீதம் சந்தையை சீன தயாரிப்புகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் தரமான தயாரிப்புகளுக்கு இங்கு பெறும் வரவேற்பு கிடைக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.

வி-கார்ட் ஸ்டெபிலைஸர்களை விட சீன தயாரிப்புகள் 30 சதவீதம் விலை குறைவு. எனவே குறைந்த விலையில் தரமான தயாரிப்புகளை ஆப்பிரிக்க நாடுகளில் அறிமுகப்படுத்துவது குறித்தும் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

இந்தியச் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஸ்டெபிலைஸர்களில் தேவைப்படுவது போல வோல்டேஜை அதிகரிக்கத் தேவை இல்லை. மாறாக உயர் அழுத்த மின்சாரத்தை சீராக விநியோகிக்க மட்டுமே ஆப்பிரிக்க நாடுகளில் ஸ்டெபிலைஸர்கள் தேவை.

இதனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஸ்டெபிலைஸர்களின் விலையை விட 15 முதல் 20 சதவீத விலை குறைவாக இவற்றைத் தயாரிக்க முடியும் என நிறுவனம் கருதுகிறது.

புதிய தயாரிப்புகள் வி-கார்ட் நிறுவனத்தின் கோவை ஆலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails