Friday, July 31, 2009

மலையன் - -சினிமா விமர்சனம்

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை நடத்துபவர் சரத்பாபு, அவர் ஆலையில் வேலை செய்யும் விசுவாச மிக்க ஊழியர் கரண். தொழில் போட்டியில் சரத்பாபுவும் சக்திகுமாரும் மோதிக் கொள்கிறார்கள். சரத்பாபுவுக்கு துணையாக எதிரிகளை நொறுக்குகிறார் கரண்.

கரணுக்கும் உள்ளூர் அடாவடி பெண் ஷம்முவுக்கும் மோதல் ஏற்பட்டு காதல் வயப்படுகின்றனர். பெற்றோர் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். அப்போது அந்த பயங்கரம் நடக்கிறது. சரத்பாபுவின் பட்டாசு பேக்டரியில் விபத்து ஏற்பட்டு பலர் சாகின்றனர். அதில் ஷம்முவும் சிக்கி பலியாகிறார்.

சக்திகுமார் சதியால் விபத்து ஏற்பட்டதாக கரண் கொதிக்கிறார். சரத்பாபுவோ சாதாரண விபத்துதான் என்று சொல்லி சமாதான படுத்துகிறார். ஆனால் கரண் மனது அதை ஏற்க மறுக்கிறது. சதிகாரர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ரவுடிகளை வேட்டையாடி சதி திட்டத்தின் ஆணிவேராக இருப்பவரை நெருங்கும்போது அதிர்ச்சி கிளைமாக்ஸ்...

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கை போராட்டத்தை கலகலப்பு, விறுவிறுப்பு என காட்சிகளாக்கி கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர் எம்.பி. கோபி.

அழுக்கு லுங்கி, சட்டையுடன் பட்டாசு மருந்து கலக்கும் ஊழியர் வேடத்தில் கரண் கச்சிதமாக பொருந்துகிறார். எதிரிகளை நொறுக்கும்போது ஆவேசமும் அடாவடி காதலியின் ஆவேசப்பார்வையில் பெட்டிப் பாம்பாக அடங்குகையில் காதலும் காட்டுகிறார். காதலியின் கருகிய உடலை பார்த்து அலறுவது உருக்கம். சதிகாரனை அடையாளம் கண்டு அதிரும்போது, எல்லோருக்கும் அதிர்ச்சி. சண்டையிலும் வேகம் காட்டுகிறார்.

ஷம்மு துறு துறுவென வருகிறார். உதயதாரா வந்து போகிறார். அவரின் திடீர் காதல் செயற்கைத்தனம். சரத்பாபு அமைதியான வில்லனாக மிரட்டுகிறார். தொழிலாளர்களிடம் கரிசனம் காட்டும் அவர் சர்வதேச தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து கடத்துபவர் என்றும் தொழிலாளர்களை சாகடிக்க தூண்டியவர் என்றும் அறியப்படும்போது, திடுக்கிட வைக்கிறது. அவரை குடோனுக்குள்ளேயே போட்டு கரண் எரிப்பது எரிமலைத்தனம்.


முதலாளி கெட்டவன் என்பதை ஊருலகத்துக்கு பகிரங்கப்படுத்த மறுக்கும் கரணின் வாதம் ஏற்புடையதாக இல்லை. சரத்பாபு மீதான விசுவாசத்துக்கு காரணம் சொல்லும் கரணின் சிறு வயது பட்டினி கொடுமை பிளாஷ்பேக் கதை. விழிகளில் நீர் கோர்க்கிறது.


கஞ்சா கருப்பு, மயில்சாமி சிரிக்க வைக்கின்றனர். தினாவின் இசை இனிமை சேர்க்கிறது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் பட்டாசு தேச பதிவுகள்


No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...