மூட்டு வலி தீர மூலிகை மருந்து

மூட்டு வலிக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் மூட்டு வலி முற்றிய நிலையில் சிகிச்சை பெற்றால், நிவாரணம் கிடைக்க அதிக அவகாசம் தேவைப்படும். செலவும் அதிகமாகும். மருந்துகள் மூலம் சிலருக்கு தாற்காலிக நிவாரணம் கிடைக்கும். ஆனால், மீண்டும் முட்டு வலியால் அவதிப்படுவார்கள்.

பல வகைகள்: அழுத்தம் காரணமாக ஏற்படும் மூட்டு வலி, "ஆர்த்தரைட்டிஸ்' எனப்படும் வீக்கத்துடன் கூடிய மூட்டு வலி, "ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ்' எனப்படும் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு வலி எனப் பல வகைகள் உண்டு.இதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோருக்கு, "ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ்' மூட்டு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு கழுத்து - முதுகுத் தண்டின் உட் பகுதியில் "ஸ்பாண்டிலிட்டிஸ்' எனும் வலியும் ஏற்படலாம். நடக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும்.

உற்ற துணைவன்: இத்தகைய மூட்டு வலிப் பிரச்னைகளைத் தீர்க்க மூலிகை மருந்துகளும் மூலிகை உணவுகளும் ("ஹெர்பல் சப்ளிமெண்ட்ஸ்') உள்ளன. இவற்றின் மூலம் மூட்டுக்களின் இயக்கத்தைச் சீர்படுத்தி வலுப்படுத்த முடியும். வலி மாயமாய் மறையும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails