டெலி சிப்ஸ்

சீரியல் தயாரிப்பில் அதிக ஆர்வம் காட்டும் நடிகை குஷ்பூ, புதிய கதைகளோடு வரும் பலரிடம் கதை கேட்டு வருகிறார். ஒரே நேரத்தில் அனைத்து சேனல்களிலும் தன்னுடைய சீரியல் வர வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமாம். இதற்காக புதிய சீரியல்களுக்கான கதை விவாதம் அவரது வீட்டிலே "தொடர்'கிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த ரமணி ஸ்ள் ரமணி நகைச்சுவை தொடரை தற்போது ஜீ டி.வி ஒளிபரப்பி வருகிறது. அனைத்து சேனல்களும் தானே தயாரித்து நகைச்சுவை தொடர்களை ஒளிபரப்பி வரும் நிலையில், பழைய தொடரை தூசு தட்டி எடுத்திருக்கிறது ஜீ டி.வி. நிர்வாகம்.

சின்னத்திரை நடிகை நீலிமா ராணி தற்போது சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். "கோலங்கள்' தொடரில் மட்டும் நடித்து வரும் அவரது கையில் இப்போது "ரசிக்கும் சீமானே', "ஜக்குபாய்', "புகைப்படம்' ஆகிய படங்கள் இருக்கிறது. முக்கிய கேரக்டர்கள் இருந்தால்தான் சீரியல் என முடிவெடுத்திருப்பதுதான் இதற்கு காரணம்.

சின்னத்திரை காதலர்கள் பட்டியலில் இசையருவியின் முரளி -நிஷா ஜோடி சேர்ந்திருக்கிறது. "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் ஜோடியாக நடனம் ஆடி காதல் வயப்பட்ட இந்த ஜோடிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails