பங்குசந்தையில் தடுமாற்றம்

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று தடுமாற்றம் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதல் புள்ளிகள் உயர்வதும் சரிவதுமாக இருந்தது. பின்னர், இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 3 புள்ளிகள் குறைந்து 15,375 புள்ளிகளில் முடிவடைந்தது.

நெய்வேலி லிக்னைட், டாடா பவர், கோடாக் வங்கி, கோத்ரெஜ் இன்டஸ்ட்ரீஸ், இந்தியா புல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஏற்றம் காணப்பட்டன.

ரிலையன்ஸ், ஜீ என்டர்டெய்ன்மென்ட், கெயில் இந்தியா, அசோக் லைலேண்ட், ரான்பேக்ஸி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டன.

தேசியப் பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 4 புள்ளிகள் உயர்ந்து 4572 புள்ளிகளில் முடிவடைந்தது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails