ஆளுக்கு ஒரு ஸ்டைல்

நேயர்களுக்கு சலிப்போ, அலுப்போ ஏற்படாத வண்ணம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதுதான் என் ஸ்டைல்'' என்கிறார் தொகுப்பாளினி சரண்யா.

கேரளம்தான் பூர்விகம் இருந்தாலும் சென்னைதான் எல்லாம். தற்போது விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வருகிறேன். பத்திரிக்கைத் துறைக்கு வர வேண்டும் என்பதுதான் என் லட்சியம், ஆசை எல்லாம். அதனால்தான் அதற்கான படிப்பை தேர்ந்தெடுத்து படித்து வருகிறேன்.

குடும்ப நண்பர் ஒருவரின் மூலமாக ராஜ் டி.வி.யில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வாய்ப்பு வந்தது. சரி, நம்முடைய லட்சியத்திற்கு பயன்படும் என நானும் ஓ.கே. சொல்லிவிட்டேன். இரண்டு வருட ராஜ் டி.வி. அனுபவத்திற்கு பிறகுதான் இப்போது ஜெயா டி.வி.க்கு வந்து "கோலிவுட் டைம்' நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன்.

நிகழ்ச்சிகளைத் தொகுப்பதில் ஆளுக்கு ஒரு ஸ்டைல் இருக்கிறது. சேனலை பார்க்கும் நேயர்களின் ரிமோட் அடுத்த சேனலை நோக்கி முன்னேறுவதை தடுக்கும் வகையில் பேச வேண்டும். அதுதான் அனைத்து தொகுப்பாளர்களின் ஒரே நோக்கமாக இருக்க முடியும். தினமும் வெவ்வேறு பாணிகளில் பேசினால்தான் அந்த நோக்கம் நிறைவேறும். அதை விட்டு விட்டு ஒரே மாதிரி பேசினால், "இந்த பொண்ணு இப்படிதான் பேசும்னு' சொல்லி விடுவார்கள். அது இல்லாமல் பார்த்துக் கொள்வதை நான் விரும்புகிறேன்.

காதல் அந்த உணர்வை உணர்கிற தருணங்கள் என் வாழ்வில் இன்னும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த தருணங்கள் வருகிற போது நானும் காதல் வயப்படுவேன். அதுவரை காதலிப்பவர்களை ரசித்துக் கொண்டிருப்பேன்.

சினிமா, சீரியல் ஆர்வம் இதெல்லாம் என் வாழ்வில் நிச்சயம் கிடையாது. அதை யோசித்து பார்த்தது கூட இல்லை. பத்திரிக்கையாளராக வர வேண்டும் என்ற லட்சியம் மட்டுமே என்னை அடுத்த கட்டத்திற்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்காக மட்டுமே நான் பயணமாகிறேன் என்கிறார் சரண்யா.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails