பிரபு தேவா தேர்ந்தெடுத்த அடுத்த பிரபு தேவா

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சி "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'.

கடந்த பல வாரங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று நடனமாடி வந்தனர்.

பல விதமான சுற்றுகளைத் தாண்டி இறுதி போட்டிக்கு பிரேம் கோபால், ஷெரிஃப், நந்தா, மனோஜ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் பங்கு கொண்டு நடனமாடிய இறுதி சுற்றுப் போட்டி சென்னை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நடன இயக்குநர் பிரபுதேவா கலந்து கொண்டு போட்டியாளர்களில் முதல் நபரை தேர்ந்தெடுத்தார்.

விஜய் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த இறுதி போட்டியில் நான்கு போட்டியாளர்களும் இரண்டு கட்டமாக போட்டியிட்டனர். முதல் சுற்றில் மேற்கத்திய நடனமும், இரண்டாம் சுற்றில் விருப்பப்பட்ட நடனத்தையும் ஆடினர். ஒவ்வொருவரின் நடனத்தையும் கவனித்த பிரபுதேவா தன்னுடைய கருத்துகளை தெரிவித்து இறுதியில் ஷெரிஃப் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

ஷெரிஃப்பிற்கு ரூ.10 லட்சமும், மற்ற மூன்று போட்டியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பு (ஜூலை -3) வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails