பாரத ஸ்டேட் வங்கியின் "மகா ஆனந்த்' காப்பீடு

பாரத ஸ்டேட் வங்கியின் ஆயுள் காப்பீடு திட்டத்தின்கீழ் "மகா ஆனந்த்' எனும் புதிய காப்பீடுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிராமங்கள் மற்றும் சிற்றூர்களில் உள்ளவர்களுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சேருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

55 வயதுக்குள்பட்டவர்கள் இதில் சேரலாம். காப்பீடு முதிர்ச்சி அடையும் காலம் 65 ஆண்டுகள் வரை ஆகும். ப்ரீமியம் தொகையை ஆண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை, காலாண்டுக்கு ஒரு முறை, மாதம் ஒரு முறை என வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப செலுத்தலாம்.

இத்திட்டத்துக்கான குறைந்தபட்ச ப்ரீமியம் ரூ.6 ஆயிரம். அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை செலுத்தலாம். அதிகபட்ச உத்தரவாத தொகை ரூ.3 லட்சம் ஆகும்.

இதில் ஈக்விடி, ஈக்விடி ஆப்டிமைசர் மற்றும் பாண்ட் ஃபண்ட் என 3 திட்டங்கள் உள்ளன. குறைந்தபட்ச கூடுதல் ப்ரீமியத் தொகை ரூ. 1,500 ஆகும்.

பாலிசி எடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் குறிப்பிட்ட அளவு தொகையை திரும்ப பெறலாம். வருமான வரிச்சட்டம் பிரிவு 80 சி மற்றும் 10, 10டியின் கீழ் வரிச்சலுகையும் பெறலாம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails