ராஜீவ் காந்தி கொலை-5

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிடிபட்டவர்களை அடைத்து வைக்க பூந்தமல்லி சப்_ஜெயில் பலத்த பாதுகாப்பு கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. 14 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் 18 அடி உயரத்துக்கு உயர்த்திக் கட்டப்பட்டது. மேலே கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டன. கூடுதலாக 10 சிறை அறைகள் கட்டப்பட்டன. இங்கு நளினி, முருகன் உள்பட ராஜீவ் கொலையையொட்டி கைதானவர்கள் அடைக்கப்பட்டனர்.

சி.பி.ஐ. பிடித்து வைத்து விசாரித்து வந்த நளினியின் தங்கை கல்யாணி விடுவிக்கப்பட்டாள். ராஜீவ் கொலை வழக்கில் புதிதாக விஜயன் என்கிற பெருமாள் விஜயன் (வயது 26), பாஸ்கர் என்கிற வேலாயுதம் (55) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

மாமனார் _மருமகனான இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்தான். அகதிகளாக இந்தியா வந்தவர்கள். கொடுங்கைïரில் தங்கி இருந்தார்கள். இவர்களது வீட்டு சமையல் அறையில், தரைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த `வயர் லெஸ்' கருவியை புலனாய்வு போலீசார் கைப்பற்றினார்கள். இந்த வயர்லெஸ் கருவி மூலம் இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிகளுடன் சிவராசன் பேசி இருக்கிறான். ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பும், கொலை நடந்த பிறகும் இங்கு சிவராசன் வந்து தங்கிச் சென்று இருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் நீதிபதியாக முதலாவது அடிஷனல் செசன்சு நீதிபதி எஸ்.எம்.சித்திக் நியமிக்கப்பட்டார். இந்த தனி செசன்சு கோர்ட்டு சென்னை கோர்ட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலையாளியான தனுவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் பக்கமுள்ள கொடியங்காடு பகுதியைச் சேர்ந்த மிராசுதார் சண்முகம் (40) என்பவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது தோட்டத்தில் ஏராளமான வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவரை தனி ஹெலிகாப்டர் மூலம் வேதாரண்யம் அழைத்துச்சென்று சோதனை போட்டனர்.

அவரது தோட்டத்தில் பெட்டிபெட்டியாக பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினார்கள். பிறகு மிராசுதார் சண்முகத்தை அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்க வைத்தார்கள்.

சுற்றுலா விடுதி அருகில் உள்ள மரத்தில் மிராசுதார் சண்முகம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். மிராசுதாரை போலீசார் அடித்து கொன்று தொங்க விட்டுவிட்டதாக அவரது மனைவி பவானி ஜனாதிபதிக்கு தந்தி கொடுத்தார்.

பிறகு நடந்த பிரேத பரிசோதனையில் மிராசுதார் சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக டாக்டர் அறிக்கை கொடுத்தார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் (எல்.டி.டி.இ.) பிரபாகரன் உள்பட 41 பேர் மீது தனிக்கோர்ட்டில் 20_5_92 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. "ஒற்றைக்கண்" சிவராசன் தனு, சுபா, கோடியக்கரை மிராசுதாரர் சண்முகம் உள்பட 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் இலங்கையில் இருந்தனர். எனவே இவர்கள் 3 பேரும் "பிரகடனம் செய்யப்பட்ட குற்றவாளிகள்" என்று அறிவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் நளினி, அவள் கணவன் முருகன் உள்பட 26 பேர் மீது மட்டும் வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு முடிவு செய்தது.

குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் விவரம் வருமாறு:_ 1. நளினி (வயது 33) நர்சு பத்மாவின் மகள். 2. முருகன் (28) நளினியின் கணவன். விடுதலைப்புலி. 3. சின்னசாந்தன் (33) 4. சங்கர் (30) 5. விஜயானந்தன் (47) 6. சிவரூபன் என்கிற சுரேஷ்குமார் (26) 7. கனகசபாபதி (76) 8. ஆதிரை (23) கனகசபாபதியின் பேத்தி. 9. ராபர்ட் பயாஸ் (31) 10. ஜெயக்குமார் (30) 11. சாந்தி (30) ஜெயக்குமாரின் மனைவி 12. விஜயன் (32) 13. செல்வலட்சுமி (31) விஜயனின் மனைவி. 14. பாஸ்கரன் (62) விஜயனின் மாமனார். 15. சண்முக வடிவேலு (53)

16. ரவிச்சந்திரன் என்ற ரவி (30) தமிழர் மீட்புப்படைத் தளபதி. 17. சசீந்திரன் என்கிற மகேஷ் (27) 18. பேரறிவாளன் என்ற அறிவு (24) ஜோலார் பேட்டையைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி. 19. இரும்பொறை (35) திருச்சி. 20 பத்மா (56) நர்சு. சென்னை ராயப் பேட்டையைச் சேர்ந்தவர். 21. பாக்கியநாதன் (31) நர்சு பத்மாவின் மகன். அச்சக அதிபர். 22. சுபா சுந்தரம் (50) போட்டோ கிராபர்.

23. தனசேகரன் (55) லாரி அதிபர். 24. ரங்கன் (30) ஒற்றைக்கண் சிவராசனின் கார் டிரைவர். 25. விக்கி என்கிற விக்னேசுவரன் (33) 26. ரங்கநாத் (53) பெங்களூர் தொழில் அதிபர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails