காரைக்காலில் சூரிய கிரகணத்தின்போது கல்லூரி பேராசிரியர்கள் மேற்கொண்ட அறிவியல் ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சூரிய கிரகணம் ஜூலை 22ஆம் தேதி காலை 5.20 முதல் 7.30 மணி வரை தெரியுமென அறிவிக்கப்பட்டதையொட்டி, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் நவீன கதிர்வீச்சு கருவிகள் கொண்டு கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்திருந்தனர்.
கிரகணத்தின் மூலம் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இயற்பியல் துறை தலைவர் சந்தோஷ்குமார் தலைமையிலான பேராசிரியர்கள் குழு ஆய்வு நடத்தியது.
இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர் ந. வசந்தகுமாரிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
சூரிய கிரகணத்தின்போது கடல் நீரில் உள்ள ஹைட்ரஜனின் தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அறிக்கையை ஆட்சியரிடம் வழங்கிய பேராசிரியர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் லட்சுமி சீனிவாசன், ஆய்வில் பங்குகொண்ட அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ரங்கையன், நாகபாலசுப்ரமணியன், ஆசிரியர் பால்ராஜ், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் சம்பந்தன், முனைவர் நாடிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment