மேப் இந்தியா நிறுவனம் ஜிபிஆர்எஸ் தளத்தில் செயல்படும் "மேப்பி இந்தியா லைட்' எனும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. 122 கிராம் எடை கொண்ட இந்த சாதனத்தில் 3.5 அங்குல திரை உள்ளது. இதனால் பிரகாசமான சூரிய ஒளியில்கூட நீங்கள் செல்ல வேண்டிய பாதையைத் தெளிவாக அறிய முடியும். 12.5 மி.மீ தடிமன் கொண்ட இந்த சாதனத்தை மிக எளிதாக சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம். இந்த சாதனத்தில் 401 நகரங்களின் வழிகளும் 8.3 லட்சம் கி.மீ. தூர சாலையும் உள்ளன. 4 லட்சம் கிராமம் மற்றும் நகரங்களின் வழித் தடமும் இதில் உள்ளது. திரையரங்குகள், உணவு விடுதிகள், பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் உள்ளிட்டவை பற்றிய தகவல்கள் இதில் உள்ளன. இது கையிலிருந்தால் நீங்கள் தைரியமாக எந்த புதிய ஊருக்கும் செல்லலாம். இடம் தெரியாத பகுதியில்கூட நீங்கள் எங்கிருக்கிறீர்கள், செல்ல வேண்டிய இடம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை இதன் உதவியோடு அறிந்து கொள்ளலாம். முன்னணி கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் மையங்களில் இது விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 11,990.
குழந்தைகளுக்கேற்ற...
பிறந்த குழந்தைகளுக்கேற்ற அழகு சாதனப் பொருள்களை ஹிமாலயா நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பொருளாக தனித்தனியாக வாங்காமல் அனைத்தும் ஒரு சேர ஒரே பாக்கெட்டில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட இந்தப் பொருள்கள் குழந்தைகளின் சருமத்துக்கு எவ்வித கேடும் செய்யாது, பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இந்த பாக்கெட்டில் குழந்தைகளுக்கான ஷாம்பூ, ஆயில், டயப்பர் ராஷ் கிரீம், வைப்ஸ், சோப்பு, லோஷன், பவுடர் ஆகியன இருக்கும். பிறந்த குழந்தைகளைப் பார்க்கச் செல்லுவோர் இதை பரிசாகவும் அளிக்க ஏற்றது. விலை ரூ. 125 முதல் ரூ. 251 வரை. முன்னணி மருந்து விற்பனையகங்கள், ஹிமாலயா விற்பனையகங்களில் இவை கிடைக்கும்.
கம்பியின்றி இணையதள இணைப்பு...
புதுமையான தயாரிப்புகள், சேவைகள் மூலம் இளைஞர்களைக் கவர்ந்து வரும் வர்ஜின் மொபைல் நிறுவனம் வி-லிங்க் எனப்படும் தகவல் சேமிப்பு மற்றும் தகவல் பரிமாற்று கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. லேப்டாப் மூலம் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவோருக்கு மிகவும் உபயோகமானதாக இக்கருவி வந்துள்ளது. இதனால் இணையதள இணைப்பைப் பெறுவதற்கு மோடம் வசதி தேவையில்லை. கம்பியில்லா இணையதள சேவையை இக்கருவி அளிக்கும். "மாற்றி யோசி' என்ற விளம்பரம் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ள நிறுவனம் வர்ஜின் மொபைல். தற்போது 1 ஜிபி நினைவகத்திறனுடன் இக்கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை வாடிக்கையாளர்கள் தங்கள் கம்ப்யூட்டருடன் இணைத்துக் கொண்டால் ஒரு மாதத்திற்கு இலவசமாக தகவல் பரிமாற்ற சேவையைப் பெறலாம். அறிமுக சலுகையாக இது அளிக்கப்படுகிறது. இக்கருவியின் விலை ரூ. 2,100. இக்கருவியைப் பொருத்திக் கொண்டு மாதம் ரூ. 801 கட்டணம் செலுத்தி நேரக் கட்டுப்பாடு இன்றி இணையதளத்தை பயன்படுத்தலாம்.
0 comments:
Post a Comment