அரசு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வரும் 6-ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்குகிறது.
இந்த ஆண்டு (2009-10) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 13,937 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ரேங்க் பட்டியல் அடிப்படையில் மொத்தம் 2,000 மாணவர்களுக்கு முதல் கட்ட கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கவுன்சலிங் அட்டவணையும் மாணவர்களுக்கான கவுன்சலிங் அறிவுரையும் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்புப் பிரிவினருக்கு...: கவுன்சலிங் முதல் நாளான ஜூலை 6-ம் தேதி உடல் ஊனமுற்றோர், விளையாட்டில் சிறந்து விளங்குவோர் உள்ளிட்ட 53 சிறப்புப் பிரிவு இடங்களுக்கு கவுன்சலிங் நடைபெறும். இந்த சிறப்புப் பிரிவு இடங்களுக்கு மொத்தம் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சலிங்குக்கு பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் வரும்போது எம்.பி.பி.எஸ். படிப்புக்கான முழுத் தொகையான ரூ.10,495-க்கு டி.டி. எடுத்து வர வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தத் தொகை ரூ.8,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். கட்டணம் தொடர்பான விவரங்கள் விண்ணப்பத்துடன் அளிக்கப்பட்ட தகவல் குறிப்பேட்டில் பக்கம் 14-ல் இடம்பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment