ரூ.50க்கு பதில் ரூ.1000 செலவு

பிளஸ் 2 முடித்து 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர், கிராமங்களில் இருந்து வந்து படித்தனர்.
இவர்களுக்கு ரயில் கட்டணம் 3 மாதங்களுக்கு ரூ. 150 தான். ஆனால் அகல ரயில் பாதைத் திட்டத்துக்காக ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பஸ்களில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் செல்லும் மாணவர்கள், மாதம் ரூ. 1000-க்கும் மேல் செலவிட வேண்டியது இருக்கிறது. வசதி படைத்த மாணவர்கள் பஸ்களில் சென்றும், விடுதிகளில் தங்கியும் படிக்கிறார்கள்.

சுயநிதிக் கல்லூரிகளைவிட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கட்டணம் குறைவு. சீட்டுகள் எண்ணிக்கையும் அதிகம்.
ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்கள், கடலூர் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், குறிஞ்சிப்பாடி, புவனகிரி தனியார் கல்லூரிகளில் சேர அலைமோதுகிறார்கள். வழக்கத்தைவிட இந்த ஆண்டு மேற்கண்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பங்கள் அதிகமாக இருந்ததாக கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 800 இடங்களுக்கு 4,700 விண்ணப்பங்களும், புனித வளனார் கல்லூரியில் 1,500 இடங்களுக்கு 3 ஆயிரம் விண்ணப்பங்களும், கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் 800 இடங்களுக்கு 3 ஆயிரம் விண்ணப்பங்களும் வந்தன. அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காத, தனியார் கல்லூரிகளில் பணம் செலுத்த முடியாத மாணவர்களும், பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு, கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

இவர்களில் கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவியர்தான் அதிகம். கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் பயில்வது வழக்கம்.
ரயில் வசதி இல்லாததால் இவர்களும் கூடுதல் பணம் செலுத்தி, வேறு கல்லூரிகளை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

இதனால் இப் பல்கலைக்கழகத்தில் நமது மாணவர்களுக்கான இடங்களை, பிற மாநில மாணவர்கள் ஆக்கிரமித்து உள்ள நிலையும் உருவாகி இருக்கிறது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails