'மாப்பிள்ளை பெஞ்ச்' மாணவர் கதை!

கிரீன் ஆப்பிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் "சிந்தனை செய்'.

படத்தை இயக்கி கதாநாயகனாக நடிப்பவர் யுவன். தெலுங்கின் பிரபல நடிகை மதுசர்மா, புதுமுகம் தர்ஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். நிதிஷ்குமார், செஷாந்த், பாலா, சபி, காதல் தண்டபாணி, மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநர் யுவனிடம் பேசியபோது...

""பள்ளி வகுப்பறையில் சரியாகப் படிக்காமல் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவர்களை "மாப்பிள்ளை பெஞ்ச் பார்ட்டி' என நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம். சரியாகப் படிக்காததினால் இவர்களை முழு முட்டாள்கள் எனக் கருதி விட முடியாது. இவர்களிடமும் ஒரு திறமை இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய வித்தியாசமான கதைதான் "சிந்தனை செய்'. படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளன. சாமானிய மாணவர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தைத் தரும்'' என்றார்.

இசை -தமன். பாடல்கள் -பா.விஜய், யுகபாரதி, யுவன். ஒளிப்பதிவு -ஸ்ரீ பவன் சேகர். படத்தொகுப்பு -கே.தணிகாசலம். தயாரிப்பு -அம்மா ராஜசேகர்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails