காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டும் என்றார் நடிகர் விஜய்.
"விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை கணினி மையம் தொடங்கப்பட்டது. இதைத் திறந்துவைத்து நடிகர் விஜய் பேசியது:
""எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற லட்சியம் சிறு வயது முதலே என்னுள் வேரூன்றிவிட்ட விஷயம்.
திரைத்துறைக்கும் அரசியலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கடலில் இறங்கும்போது எப்படி சுழலையும் ஆழத்தையும் அறிந்து இறங்க வேண்டுமோ அதேபோல, அரசியலில் இறங்க எச்சரிக்கையும் நல்ல பக்குவமும் தேவை. நான் ஆல மரமாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் எந்தப் புயலுக்கும் ஆல மரம் கீழே சாய்ந்து விழாது.
மக்கள் இயக்கத்தில் மாவட்டத் தலைநகரங்களில் ஒரு லட்சம் உறுப்பினர்களையும் ஒன்றியப் பகுதிகளில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும். அதை ரசிகர்களாகிய நீங்கள்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் குடும்பத்தையோ மற்ற விஷயங்களையோ பெரிதாகக் கருதாமல் மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி போன்றவற்றை மட்டுமே முக்கியமாகக் கருதுவேன். மக்களுக்குத் தலைவனாகவும் தொண்டனாகவும் இருப்பேன்.
தற்போது அரசியல் தலைவர்களின் புத்தகங்களைப் படித்து வருகிறேன். காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டும்'' என்றார் விஜய். விழாவுக்கு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க கெüரவத் தலைவரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைமை வகித்தார். திரைப்படத் தயாரிப்பாளர் கோவைத்தம்பி, இயக்கத்தின் மாவட்ட கெüரவத் தலைவர் எஸ்விஎஸ். செந்தில் ஆண்டவர், மாநிலத் தலைவர் சி. ஜெயசீலன், மாநிலச் செயலர் ஆர். ரவிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment