ஆஸ்திரேலிய கல்லூரியில் இந்திய மாணவர்களை சேர்க்க எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் மீது ஆஸ்திரேலியர்கள் சிலர் நிறவெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை அதிக அளவில் சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக லிபரல் கட்சியின் முன்னாள் தலைவர் புரூஷ் பயர்டு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பிட்ட ஒரு நாட்டில் இருந்து அதிக அளவில் மாணவர்களை சேர்க்கக்கூடாது. மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தான் அதிக அளவில் கல்வி கற்று வருகின்றனர்.

அவர்களின் எண்ணிக்கையை குறைக்கவே அங்கு இது போன்ற மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails