இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் வரிசையில் பாடகராகவும் ஆகி விட்டார் அமீர். சீர்மிகு கூவத்திலே... என விரிகிறது "யோகி'படத்துக்காக அமீர் பாடிய பாடல். கூடவே கவிஞர் சினேகனும் பாடியிருக்கிறார்.
""என்னுடைய படத்துக்கு யுவன் இசையமைக்கும் போது அவரின் தனித்தன்மைகள் வெளிவருகிறது. மாடர்ன் இளையராஜாவாக மாறி விடுகிறார்.
என் படம் எப்படி இருக்கும் என்கிற மந்திரம் தெரிந்ததால் மட்டுமே அவரால் அப்படி இயங்க முடிகிறது. திரையில் வரும் காட்சிகளுக்கு ஏற்ப இசை அமைத்து இருக்கிறார். "யோகி'யில் மொத்தம் நான்கு பாடல்கள். ஏற்கனவே "பருத்தி வீரன்' படத்தில் டண்டக்கானு கொடுத்தது நான்தான் நிறைய பேருக்கு தெரியாது.
யுவனுக்கு அந்தக் குரல் மிகவும் பிடித்திருந்தது. அதை ஞாபகத்தில் வைத்து கொண்டு "யோகி'யில் ஒரு பாட்டு பாட பயன்படுத்திக் கொண்டார் அவ்வளவுதான். மற்றபடி நமக்கு பாடகர் ஆசையெல்லாம் கிடையாது.
சீர்மிகு கூவத்திலே... பாட்டில் டான்சும் ஆடியிருக்கிறேன். குப்பத்து இளைஞர்கள் டான்ஸ் ஆடினால் எப்படியிருக்கும். மிகவும் கலவரமான பாடல் அது. மாஸ்டர் தினேஷ் அந்தப் பாடலுக்காக என்னை மிகவும் நன்றாக இயக்கியிருக்கிறார்'' என்கிறார் அமீர்.
0 comments:
Post a Comment