மதுரை- தேனி வழி ஆண்டிப்பட்டி - விமர்சனம்

பஸ் பயண காதல் கதை...

ஆசிரியர் வேலைக்கு தேர்வாகும் அரவிந்த் வினோத் பணியில் சேர புறப்படுகிறார். மதுரை பஸ் நிலையத்தில் நிற்கும்போது பின்னால் நகரும் பஸ் ஒன்று மதுரையில் படிப்பை முடித்து ஊருக்கு புறப்பட காத்து நிற்கும் ஸ்ருத்திகா மேல் மோத வருகிறது. விருட்டென அவரை இழுத்து காப்பாற்றுகிறார். இருவரும் சினேக புன்னகை பரிமாறுகின்றனர். ஒரே பஸ்சில் புறப்படுகிறார்கள்.

பிறருக்கு உதவுதல், தண்ணீர் பிரச்சினைக்காக பஸ்சை மறிக்கும் மக்களை அமைதிப்படுத்தி தீர்வு சொல்லுதல் போன்ற அரவிந்த் நடவடிக்கைகள் ஸ்ருத்திகாவுக்கு பிடிக்கிறது. அரவிந்தும் ஸ்ருத்தி மேல் காதல் வயப்படுகிறார்.

ரெயில்வே கிராசிங் நிறுத்தத்தில் ஸ்ரித்தியிடம் திருமணம் செய்ய விரும்புவதாக கூறுகிறார். அவர் பதில் கூறாமல் போய் விடுகிறார்.

ஸ்ருத்திகா இடம் வந்ததும் இறங்கி வீட்டுக்கு செல்கிறார். அரவிந்த் பின் தொடர்ந்து சென்று வீட்டை கண்டுபிடிக்கிறார். ஸ்ருத்திகா பெற்றோரிடம் அவரை திருமணம் செய்ய பெண் கேட்கிறார். பெற்றோர் ஆவேசமாகி வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர்.


ஸ்ருத்திகா தாய் மாமன்கள் மறித்து அடிக்க பாய்கின்றனர். இதனால் கலவரம் மூண்டு பிரச்சினை பஞ்சாயத்துக்கு வருகிறது. ஸ்ருத்திகா நல்ல பெண் என்றும் நான்தான் அவரை காதலித்தேன் என்றும் அரவிந்த் சொல்கிறார்.

ஸ்ருத்திகா களங்கப்படக்கூடாது என்று காதலை தியாகம் செய்து விட்டு புறப்படவும் தயாராகிறார். இருவரும் இணைந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்...

கிராமிய ஜனங்களின் யதார்த்தமான பஸ் பயணத்தையும் அதற்குள் நடக்கும் காதலையும் உயிரோட்டமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் ரதிபாலா...

காதல் ஜோடிக்கு திருமணம் செய்து போலீசில் மாட்டும் அரவிந்த் வினோத்தையும் அவர் நண்பரையும் இரு போலீஸ்காரர்கள் பிடிக்க போகும் ஆரம்ப சீனே கலகலப்பு...

பஸ் நிலையத்தில் தந்தையுடன் வரும் ஸ்ருத்திகாவை காப்பாற்றுவது, பிறகு அதே பஸ்சில் பயணம் செய்து பார்வைகளை பரிமாறி காதல் வளர்ப்பது, பூக்காரனிடம் பூ வாங்க ஸ்ருத்திகா கையை வெளியே நீட்ட அரவிந்த் பூப்பந்தை திணிப்பது கவிதை...

ஸ்ருத்திகா ஊர் வந்ததும் அரவிந்த் பின் தொடர்கையில் என்ன நடக்குமோ, என்ற பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அரவிந்த் பெண் கேட்டு விரட்டப்படுவது. மாமன்கள் மல்லுக்கட்டுவது, விறுவிறுப்பான சீன்கள். கிளைமாக்சில் ஸ்ருத்திகா பேசும் வசனங்கள் அழுத்தமானவை.

டீக்கடைகாரராக வரும் சிங்கமுத்து காமெடி, குணசித்திர நடிப்பில் அசத்துகிறார். நெல்லை சிவா, முத்துக்காளை, ராஜ்குமார் சிரிப்பு தோரணம் கட்டுகின்றனர். சில சீன்களில் நாடகத்தனம் தெரிகிறது. பஸ்சில் பயணப்படும் பயணிகள் மதுரை பாஷை பேசி நிஜ பயணத்தை மனதில் பதிக்கின்றனர்.

சுருளிப்பட்டி சிவாஜி, ரதிபாலாவின் வசனங்கள் பலம். ஜேவியின் இசையில் பாடல்கள் இனிமை

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails