மும்பை பங்குச் சந்தை இந்த வாரம் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. புதன்கிழமையன்றும் சரிவு தொடர்ந்து 83 புள்ளிகள் குறைந்தது. இதனால் குறியீட்டெண் 15,467 புள்ளிகளாகச் சரிந்தது.
தேசிய பங்குச் சந்தையில் 17 புள்ளிகள் சரிந்ததால் குறியீட்டெண் 4,608 புள்ளிகளாகக் குறைந்தது.
மேலும் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவு பங்குகளை விற்பனை செய்ததும் சரிவுக்குப் பிரதான காரணமாக இருந்தது. கட்டுமானம், ஆட்டோமொபைல், மின்னுற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் போக்கு மிக அதிகமாக இருந்தது. இதனால் இந்நிறுவனப் பங்குகளின் விலை சற்று அதிகமாக இருந்தது. சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளுக்கு கிராக்கி அதிகமாக இருந்தது.
ஸ்டெர்லைட் நிறுவனப் பங்குகள் மிக அதிகபட்சமாக 3.16 சதவீத அளவுக்குச் சரிவைச் சந்தித்தன. பிஎச்இஎல் பங்குகள் 2.65 சதவீதமும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 2.57 சதவீதமும், மாருதி சுஸýகி 2.27 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.13 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2.09 சதவீதமும், கிராஸிம் பங்குகள் 1.44 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் 4.56 சதவீதமும், ஹிந்த் யூனிலீவர் 2.01 சதவீதமும், ஹீரோ ஹோண்டா 1.40 சதவீதமும், டிசிஎஸ் 1.19 சதவீதமும், இன்ஃபோசிஸ் 1.05 சதவீதமும் அதிக விலைக்கு விற்பனையாயின.
மொத்தம் 1,601 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. 1,163 நிறுவனப் பங்கு விலை சற்று அதிகரித்தது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனப் பங்கு மிக அதிகபட்சமாக ரூ. 233.60 கோடிக்கு விற்பனையானது.
0 comments:
Post a Comment