Thursday, September 3, 2009

பொம்மாயி - விமர்சனம்

இந்தியில் வெளியான “பூங்க்” தமிழில் “பொம்மாயி” பெயரில் வந்துள்ளது. பில்லி சூனிய கதை...கல்குவாரி என்ஜினீயர் சுதீப். மனைவி, மகன், மகள் மீது பாசமாக உள்ளார்.


அஸ்வினியையும் அவர் கணவரையும் தனது தொழிலுககு பார்டனராக சேர்த்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அஸ்வினி தனக்கு துரோகம் செய்ததை கண்டுபிடித்து விரட்டியடிக்கிறார்.

ஆவேசமாகும் அஸ்வினி, சுதீப்பை பழிவாங்க அவர் மகள் ரக்ஷாவின் தலைமுடியை அறுத்து, கால்மண் எடுத்து பில்லி சூனியம் வைக்கிறார். இதனால் ரக்ஷா மனநிலை மாறி பித்து பிடித்தவள்போல் ஆகிறாள்.

டாக்டர்கள் குணப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ரக்ஷா எப்படி காப்பாற்றப்படுகிறாள் என்பது பரபர கிளைமாக்ஸ்.

பயங்கர இரவு, திகலூட்டும் பங்களா, பயமுறுத்தும் சிலைகள், வெறித்து பார்க்கும் காகம், உருண்டு ஓடி வரும் பாறாங்கற்கள் என ஆரம்பமே படபடக்க வைக்கிறது.

கடவுள் நம்பிக்கையற்றவராக வரும் சுதீப் குடும்பம் மேல் பாசம் காட்டுவதிலும், மகள் பில்லிசூனியத்தால் படும் அவஸ்தைகளை பார்த்து கலங்குவதிலும் மனதை தொடுகிறார். உருட்டிய கண்கள், வில்லத்தன சிரிப்புடன் வரும் அஸ்வினி பயங்கர வில்லி.

பங்களா வீட்டு முன் கிடக்கும் எலும்பையும், எலுமிச்சை பழத்தையும் கையில் தூக்கி சுதீப் வெளியே எறிவது விபரீதம் நடக்கப்போகிறது என்ற பகீர்.

ரக்ஷா ஆண் குரலில், மிரட்டுவது அந்தரத்தில் பறந்து விழுவது திகிலானவை. தாயாக வரும் அம்ரிதா, கார் டிரைவர், வேலைக்காரி, பாட்டி, பில்லி சூனியத்தை எடுக்க வரும் மந்திரவாதி கேரக்டர்களும் வலுவானவை.


திகில் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. ஆரம்ப காட்சிகள் சாதாரணமாக நகர்ந்தாலும் அவை படமாக்கப்பட்ட விதம் பயமுறுத்துகிறது. பப்பி இசை, சவீதாசிங் ஒளிப்பதிவு கைகொடுக்கின்றன.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...