ஒரிஜினல் சாஃப்ட்வேர்: மைக்ரோசாஃப்ட் புது திட்டம்

மைக்ரோசாஃப்ட்(Microsoft) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரிஜினல் சாஃப்ட்வேர் கிடைப்பதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் இனி ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேரை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வசதியை நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேரைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, சாஃப்ட்வேரின் லைசென்ஸ் காலம் முடிவதற்கு முன்னதாகவே அறிவிப்பு வெளியாகும்.

இதன் மூலம் அவர்கள் ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேரை புதுப்பித்துக் கொள்வதோடு அதை வாங்கவும் முடியும். இவை அனைத்தும் உள்ளூரில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து பெறலாம்.

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் 39 சதவீதம், உரிய அங்கீகாரம் இல்லாத சாஃப்ட்வேரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெருமளவு இழப்பை சந்தித்துள்ளனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய சேவையைத் தொடங்கியுள்ளதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குநர் தருண் மாலிக் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails