கணினியின் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

நமது கணினியில் directory அல்லது கோப்புகள் போன்றவை தேவையில்லை என நினைத்தால், அவற்றை அழிக்கிறோம். அழிக்கப்பட்டவை recycle bin ல் (குப்பைத்தொட்டி) சேகரமாகும். அங்கேயும் சென்று empty recycle bin எனக் கொடுத்துக் காலி செய்கிறோம்.

Shift + Delete சேர்த்து அழித்தால் recycle bin க்குச் செல்லாமல் நேரடியான அழிவு.

இந்தச் செயல்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். விண்டோஸ் பயனாளர்களுக்குப் பரிச்சயமான செயல்களே இவை.

ஆனால் ஒரு திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர் ஒரு பார்வை பார்த்தால் அவரிடம் உள்ள data recovery பயன்பாட்டின் மூலம் இப்படி அழிக்கப்பட்ட கோப்புகளை / directoryகளை மீட்டுவிடுவார்.

அழிக்கப்பட்ட இடத்தில் வேறு ஒரு தகவல் பதிவாகாமல் இருக்கும் வரையில் அதை மீண்டும் தருவித்துவிடலாம். இதனால் ஏதேனும் ரகசியத் தகவல்களை அழித்துவிட்டோம் என யாரும் மார்தட்டிக் கூறிவிட இயலாது.

அழிக்கப்பட்ட தடயத்தைக் கணினியின் hard disk மறக்கவே மறக்காது - எதுவரையில்? - புதிய தகவல்கள் ஏற்கனவே அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அமரும் வரையில்.

கோப்புகளை மீட்கச் செய்ய வழியே இல்லாமல் - ஒட்டுமொத்தமாக நிரந்தரமாக (அதி தீவிரமான நிரந்தரமாக) அழித்துக் காலி செய்வது எப்படி?

இதற்கு SDelete (Secure Delete)பயன்பாடு உதவுகிறது. Microsoft நிறுவனத்தின் இலவசப் பயன்பாடு இது.

தரவிறக்கம் (Download) செய்யவும், மேலதிக விபரங்களுக்கும் கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails