அன்று மைனஸ்; இன்று ப்ளஸ்!

காதலில் விழுந்தேன்', "மாசிலாமணி' படங்களுக்குப் பிறகு "யாதுமாகி', "கதிர்வேல்', "திருத்தணி' என பிஸியாகவுள்ளார் சுனேனா. "திருத்தணி' படப்பிடிப்பில் இருந்தவரிடம் பேசியபோது...

""ஏ, பி, சி என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருப்பதில் இரட்டிப்பு சந்தோஷம். இதை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பேன்.

தற்போது நான் நடித்துவரும் மூன்று படங்களிலும் வித்தியாசமான வேடங்கள் அமைந்துள்ளன. கதையுடன் தொடர்புடையதாக இருக்கும் கேரக்டர்களில் மட்டும்தான் நடிப்பேன். டூயட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் கதையென்றால் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

ஆரம்பத்தில் தெலுங்குப் படங்களில் நடிக்க கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்தேன். என்னுடைய ஸ்டில்களைப் பார்த்துவிட்டு, கிட்டத்தட்ட 50 படங்களிலாவது என்னை ஒதுக்கியிருப்பார்கள். மூக்கு சரியில்லை; கண் சரியில்லை; உதடு சரியில்லை என ஏதாவது குறை சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்கள்.

அன்று என்னை எதற்காகக் குறை சொல்லி திருப்பி அனுப்பினார்களோ அதே மைனஸ் பாயிண்ட்டுகள்... இப்போது எனக்கு ப்ளஸ் பாயிண்ட்டுகளாக மாறியுள்ளன.

ரசிகர்களின் "பல்ஸ்' அறிய தியேட்டர்களுக்குச் செல்லும்போது அவர்கள் "உங்கள் சிரிப்பு நன்றாக இருக்கிறது; நடிப்பு நன்றாக இருக்கிறது' என பாராட்டுகிறார்கள். பல சினிமாக்காரர்கள் ஒதுக்கிய என்னை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

மக்கள்தான் நீதிபதிகள்'' என்று கூறும் சுனேனா, இப்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறார். ""இன்னும் இரண்டு மாதத்தில் டப்பிங் பேசும் அளவுக்குத் தமிழ் கற்றுவிடுவேன். அதன் பிறகு சொந்தக் குரலில்தான் பேசுவேன்'' என்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails